கோல்கட்டா: 'துரோகி' திரிணமுல் காங்கிரசை வீழ்த்த, 'எதிரி' மார்க்சிஸ்டுடன்
கைகோர்ப்பதில் தவறில்லை' என, கட்சி காங்கிரஸ் மேலிடத்தை, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது, இந்த மாநிலத்தில், ஏப்ரல் - மே மாதங்களில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, மாநிலத்தில், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில், 34 ஆண்டுக்கு மேல், தொடர்ந்து ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் அரசை, 2011ல் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் படுதோல்வியடைய செய்தது; அப்போது, மம்தாவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தது. இப்போது, நடக்க உள்ள தேர்தலில், மம்தாவை வீழ்த்த, மார்க்சிஸ்டுடன் கைகோர்க்க காங்கிரஸ் துடிக்கிறது. நாம என்னதாய்ன் பண்றது? மம்தா , மாயா, ஜெயா, ஷீலாதீட்சித் , உமாபாரதி ,சுஷ்மா சுவராஜ் இவக எல்லாரும் மனிதர்களின் உணர்வுகளுக்கு மிகவும் மரியாதை கொடுக்கிற சுபாவம் கொண்டவங்க , சிறந்த ஜனநாயக வாதிங்கம்ம்ம் உண்மைய சொன்னாக்கா ஆணாதிக்க வாதின்னு சொல்லிடுவாய்ங்க .....நீங்களே ஒப்பிட்டு பார்த்துக்குங்க
இதற்காக, மாநில காங்கிரஸ் தலைவர் அதிர் சவுத்ரி, டில்லிக்கு சென்று, கட்சி தலைமையை சந்திக்க உள்ளார். மற்றொரு மூத்த தலைவரும், ஜாவத்பூர் பல்கலைக்கழக பேராசிரியருமான ஓம்பிரகாஷ் மிஸ்ரா, கட்சி தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்கத்தை பொறுத்த வரை, துரோகியை விட எதிரி மேல் என்ற நிலைக்கு காங்கிரஸ் வந்துள்ளது. 2001, 2006 சட்டசபை தேர்தல்களில், திரிணமுல்படுதோல்வியடைந்தது. 2004 லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றிருந்த திரிணமுல், 2009, லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, போட்டியிட்டதால், 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
கடந்த 2011 சட்டசபை தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திரிணமுல், 184 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது; ஆனால், அதன் பின், மம்தாவின் முகம் மாறியது.ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு சரிவு ஏற்பட தொடங்கியவுடன், கூட்டணியிலிருந்து தானாக விலகினார்; காங்கிரசுக்கு எதிராக செயல்பட்டார்; 2014 லோக்சபா தேர்தலில், காங்கிரசை அவர் சிறிதும் மதிக்கவில்லை. தேவைப்பட்டால் கூட்டணி வைத்து கொள்வதும், பின் கழட்டி விடுவதும், மம்தாவின் வழக்கமாகி விட்டது. காங்கிரஸ் ஆதரவால் தான் ஆட்சியை பிடித்தோம் என்பதையே மம்தாமறந்து விட்டார்.
மார்க்சிஸ்ட், எப்போதும் காங்கிரசை எதிர்த்து தான் வந்துள்ளது. 2004ல், பா.ஜ., ஆட்சி அமையாமல் தடுக்கவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தந்தது. 2008ல், ஆதரவை விலக்கி கொண்டது. ஆனால், இடதுசாரி எம்.பி.க்கள், காங்கிரஸ் ஆதரவில் வெற்றி பெறவில்லை. திரிணமுல் எம்.பி.,க்கள், காங்கிரஸ் ஆதரவில் வெற்றி பெற்றவர்கள். தேர்தல் வந்தவுடன், பா.ஜ.,வை மீண்டும் எதிர்க்க மம்தா தொடங்கியுள்ளார். ஆனால், பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுவது தான் மம்தாவின் வழக்கம். எதிர்காலத்தில் பா.ஜ.,வுடன் மம்தா கைகோர்க்க அதிக வாய்ப்புள்ளது. மேற்கு வங்கத்தில், திரிணமுல் ஆட்சியை வீழ்த்தினால் தான், காங்கிரஸ் மீண்டெழ முடியும்.
மேலும், மேற்கு வங்கத்தில், பா.ஜ,வை காலுான்ற விடாமல் தடுக்க, இடதுசாரியுடன் கூட்டணி அமைக்க வேண்டியது அவசியம். மேற்கு வங்கத்தில், பா.ஜ., கூட்டணிக்கு ஏற்படும் தோல்வி, நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், அது காங்கிரஸ் மீண்டு எழ வழி வகுக்கும்.அதனால், மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்க, காங்கிரஸ் தமைமை, முழு ஆதரவு தர வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் மிஸ்ரா கூறியுள்ளார். தினமலர்.com
>

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக