டெல்லி: சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல்
சாசனத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில்
பொது மனுதாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக புதிய மனு ஒன்றையும்
மனுதாரர் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
women be Why can't allowed to enter Sabarimala asks Supreme Court
வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணன் ஆகியோர் அடங்கிய
அமர்வு சபரிமலைக்கு பெண்களுக்கு ஏன் அனுமதி மறுக்கபடுகிறது? என்றும்,
பெண்களுக்கு கோவிலுக்கு செல்ல அரசியல் சாசனத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள
நிலையில், மதத்தின் பெயரால் அவர்களுக்குத் தடை விதிக்க முடியாது என்று
தெரிவித்தனர்.
கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என
கோயில் நிர்வாகத்திற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் மேலும், கோயில்
நிர்வாகத்திற்கும், கேரள அரசிற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
கேரள மாநிலத்தில் உள்ள பிரபலமான சபரிமலை ஐயப்பன் கேயிலில் நுழைய 10 முதல்
50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதியில்லை. பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு
வந்த இந்த நடைமுறைக்கு எதிராக தொடங்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்துவிட்ட
உயர்நீதிமன்றம் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்தது
குறிப்பிடத்தக்கது.
//tamil.oneindia.com
//tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக