ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பால்கேரளாவுக்கு அடிமாட்டுக்கு சென்ற>மாடுகளை பிடித்து போராட்டம் ( படங்கள் )தமிழகத்தில்
ஜல்லிகட்டு போட்டி நடத்துவதற்கு விலங்கின ஆர்வலர்கள் காளைகள் துன்புருத்
தப்படுவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜல்லிகட்டு
நடத்துவதற்கு தடை பெற்றனர். இதனால் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான
ஜல்லிகட்டு தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.
இந்தாண்டு போட்டிகள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
ஜல்லிகட்டு ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல
அமைப்புகள் மத்திய மாநில அரசிற்கு அழுத்தம் கொடுத்தனர். இதனை தொடர்ந்து
மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜல்லிகட்டு போட்டி நடத்துவதற்கு
ஏதுவாக ஒரு அரசானையை பிறப்பித்தது. இந்த அரசானைக்கு எதிராக விலங்கின
ஆர்வலர்கள் மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு சென்று ஜல்லிகட்டு போட்டி
நடத்துவதற்கு தடைபெற்றனர். இந்த தடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு
அமைப்பினர் சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி
வருகின்றனர். இதே போன்று புதுக்கோட்டையிலும் பல்வேறு இடங்களில்
போராட்டங்கள் நடந்து வருகின்றது.
< புதுக்கோட்டை சந்தையிலிருந்து இரண்டு லாரிகளில் 100-க்கும் மேற்பட்ட பசு மற்றும் காளை மாடுகள் கேரளாவிற்கு அடிமாட்டிற்காக கொண்டு சென்ற போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழர் தேசிய முன்னனி அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இரண்டு லாரிகளை சிறைபிடித்தனர். இதனைத்தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஜல்லிகட்டு போட்டிக்கு தடைபெற்ற விலங்கின ஆர்வலர்கள் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு அடிமாட்டிற்காக பசுக்கள் மற்றம் காளைகள் அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்தாமல் உள்ளதை கண்டித்து கோசங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையளினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் இரண்டு லாரிகள் மற்றும் அதிலிருந்த 100-க்கும் மேற்பட்ட மாடுகளை போலீசார் பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.nakkheeran.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக