சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும்
வேளையில், இந்திய யூனியன் முஸ்லீக் கட்சியின் மாநிலத்தலைவர் பேராசிரிய
கே.எம். காதர் மொய்தீன் நேற்று, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப்
பேசினார். அதன் பின் அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அப்போது அவர்
கூறியதாவது:கலைஞர் கருணாநிதிக்கும் எங்களுக்கும் 32
வருட பழக்கம் உண்டு. கடந்த மூன்று மாதங்களாக அவரை சந்திக்கவில்லை. எனவே
இப்போது சந்தித்தேன். வரும் மார்ச் 10ம் தேதி எங்கள் கட்சியின் 69வது
நிறுவன தினத்தை கொண்டாட உள்ளோம். அதனால் விழுப்புரத்தில் மாநாடு நடத்த
உள்ளோம். அதற்கு அவருக்கு அழைப்பு விடுத்தோம்.
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் நீடிப்போம். மு.க.ஸ்டாலினின் சுற்றுப்பயணம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் திமுகவிற்கு ஆதரவு பெருகி வருகிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். திமுகவே சிறந்த ஆட்சியை கொடுக்கும்” என்று கூறினார். வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக