ஜனவரியில்
முடியும் என நக்கீரன்
கணித்து சொன்ன சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு மாதம் தள்ளி பிப்ரவரியில் இறுதி கட்டத்தை எட்டிவிடும் என்கிறது சுப்ரீம் கோர்ட் வட்டாரம்.சுப்ரீம்கோர்ட்டின் வேலைப்பளு சுமையால் கொஞ்சம் தாமதமானால் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் அதிக சூடுபிடிக்கும்; மார்ச் மாதத்தில் இறுதி தீர்ப்பு வந்துவிடும். எனவே என்ன தீர்ப்பு வரும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ.வுக்கு சாதகமாக குமாரசாமி தீர்ப்பளித்ததும் அ.தி.மு.க. வினர் இந்த வழக்கை பற்றி அதிகம் கவலைப்பட வில்லை. இந்த வழக்கை மிகவும் சீரியஸாக, கர்நாடக அரசின் சார்பாக ஆச்சார்யாவும், சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் சங்க தலைவர் துஷ்யந்த் தவேயும் கொண்டு சென்றபோதும் அ.தி.மு.க. வட்டாரங்கள் அலட்டிக் கொள்ளவில்லை.
இந்த வழக்கு பி.சி.கோஷ்-ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டபோது ஆர்.கே. அகர்வால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர். எனவே அவர் ஜெ.வுக்கு எதிராக தீர்ப்பளிக்க மாட்டார் என்ற நம்பிக்கை யோடு இருந்தார்கள்." "அமித்வராயைப் பற்றி அவ்வளவு எளிதாக முடிவு செய்ய முடியாது. இவர், அவ்வளவு எளிதாக திருப்திப்படுத்த முடியாத ஒரு கடினமான நீதிபதி என பெயரெடுத்திருக்கிறார். மும்பை தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட டைகர்மேம னுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை கடைசி நிமிடத்தில் உறுதி செய்தவர் அமித்வராய். அத்துடன் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரு ஆணுடன் பல வருடம் வாழும் பெண்களுக்கு மனைவி என்கிற அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்கிற புரட்சிகரமான தீர்ப்பைத் தந்தவர்'' என்கிறார்கள் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள்.""ஜெ.வின் சொத்துக் குவிப்பு வழக்கிற்கு இணையான ஒரு வழக்கிலும் அமித்வராய் தீர்ப்பளித்துள்ளார். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போலீஸ் தரப்பு தெளிவான ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்க வில்லை என குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்திருக்கிறார்'' எனச் சொல்கிறார் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் ஒருவர். ""இந்த வழக்கு பி.சி.கோஷ் -அமித்வராய் பெஞ்ச்சில் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சி. பி.சி.கோஷ் பொதுவாக உயர்நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகளுக்கு எதிராக தீர்ப்பு அளிப்பதை விரும்ப மாட்டார்'' என்பது அ.தி.மு.க.வினர் எதிர்பார்ப்பாக உள்ளது.""ஆனால் அமித்வராய் அவர் விசாரிக்கும் எந்த வழக்கானாலும் அதன் பின்னணி பற்றி நிறைய படித்து தெரிந்து கொள்வார். வழக்கறிஞர் வைக்கும் வாதத்தை மட்டும் கேட்டுக் கொண்டு ஒரு முடிவுக்கு அவர் வந்துவிடமாட்டார். வழக்கின் விவரங்களிலிருந்து மாறி ஒரு வழக்கறிஞர், பேசுவா ரேயானால் அவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுப்பார். பொதுவாக ஒரு அமர்வுக்கு தலைமை தாங்கும் நீதிபதிகள்தான் கேள்வி கேட்பார்கள். அமித்வராய் ஜூனியர் நீதிபதியாக இருந்தாலும் சீனியரை இடைமறித் துக் கூட கேள்வி களை கேட்பார். அவரை தவறான தீர்ப்புகளுக்கு இட்டு செல்வது கடினம்'' என்கி றார்கள் சுப்ரீம் கோர்ட் வழக்கறி ஞர்கள்.இந்த வழக்கை பொறுத்த வரை இரண்டு நீதிபதிகளுக்கும் வழக்கை பற்றி எதுவும் தெரியாது. வழக்கு பற்றிய ஆவணங்கள் 170 வால்யூம்கள் இருக்கின்றன என வழக்கறிஞர்கள் பயமுறுத்தி யிருந்தார்கள். அதனால் வழக்கை பிப்ரவரி மாதம் நடத்துங்கள் என கர்நாடக வழக்கறிஞர்கள் சொன்ன தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், "அதுவரை எங்களுக்கு வழக்கை பற்றி படிக்க நேரம் வேண்டும்' என ஓப்பன் கோர்ட்டிலேயே சொல்லியிருக் கிறார்கள்.பிப்ரவரி 2, 3, 4 தேதிகளில் தினமும் நடக்கும் வழக்கு அடுத்த தேதிகளிலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் விசாரணைக்கு எடுக்க நீதிபதிகள் சம்மதித்துள்ளனர். "எங்களுக்கு வாதம் செய்ய ஒருநாள் போதும்' என கர்நாடகா சார்பில் ஆஜரான துஷ்யந்த் தவே சொல்ல, "வாதத்தை சுருக்காதீர்கள் விரிவாகப் பேசுங்கள்' என நீதிபதிகள் சொன்னார்கள். வழக்கில் ஆஜரான ஜெ. தரப்பு வழக்கறிஞர் நாகேசுவரராவ்,"நாங்கள் வழக்கை விரைவாக விசாரிக்க ஒத்துழைப்போம்' என உறுதியளித்திருக்கிறார். மொத்தத்தில் விரைவில் முடியப் போகும் வழக்கில் ஜெ.வுக்குத் தண்டனையா? விடுதலையா? என பெட் கட்டும் அளவிற்கு விவாதங்கள் சென்னையிலும் டெல்லியிலும் நடக்கின்றன. "கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தப்பும் தவறுமாக தீர்ப்பளித் திருக்கிறார். எனவே வேறொரு நீதிபதி முறையாக விசாரிக்க வேண்டும் என வழக்கு மறுபடியும் கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு போக அதிக வாய்ப்புள்ளது' என்றும் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள். சொல் கிறார்கள். -தாமோதரன் பிரகாஷ்<

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக