சாபர்நகர்,ஜன.13 (டி.என்.எஸ்) ஆசாராம் பாபு மீதான பலாத்கார வழக்கில்
முக்கிய சாட்சியாக இருந்த சமையல்காரர் அகில் குப்தா உத்தரப் பிரதேச மாநிலம்
முசாபர்நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சுட்டு கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, அவரது குடும்பத்தாருக்கு காவல்துறை பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.அகில் குப்தா (35) தனது வீட்டுக்கு வந்து
கொண்டிருந்த போது சாலையில் அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக்
கொல்லப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.ஆசாராம் பாபுவுக்கு
எதிராக சாட்சியளித்தவர்களில் சுட்டுக் கொல்லப்படும் இரண்டாவது நபர் இவர்.
ஏற்கனவே, ஆசாராம் பாபுவுக்கு நெருங்கிய உதவியாளராக இருந்த அம்ருட் பிரஜாபதி
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக