காங்கிரஸ் தலைவர் சசிதரூர் தனது லேட்டஸ்ட் புத்தகத்தை இன்று கொல்கத்தாவில்
நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார். 'India Shastra: Reflections on the
Nation in Our Time' என்ற இந்த புதிய புத்தகத்தை எழுத மோடியின்
செயல்பாடுகள் தூண்டுகோலாக இருந்ததாக அவர் கூறியிருப்பது மீண்டும் காங்கிரஸ்
கட்சியின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மோடியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரை பாராட்டியதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைமையிடமிருந்து கடும் எதிர்ப்பை சம்பாதித்தவர் சசிதரூர்.
இந்நிலையில், மீண்டும் தனது லேட்டஸ்ட் புத்தகத்தை வெளியிடும் விழாவில் பிரதமர் மோடியை பாராட்டி சசிதரூர் பேசியவை பின்வருமாறு:-
பிரதமர் மோடி எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அது என் மனதை தொட்டுவிட்டது. பிரதமர் மோடி தனது அணியில் சரியான ஆட்களை தேர்வு செய்து வைத்திருக்கிறார். சென்ற ஆண்டு பா.ஜ.க பெற்ற அமோக வெற்றியே இந்த புத்தகத்தை எழுத எனக்கு தூண்டுகோலாக இருந்தது. அதுவே என்னை அடுத்த புத்தகத்தை எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. பிரதமர் மோடி அவரது கம்பீரமான பேச்சால் அரசியலில் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றுவிட்டார். இன்னும் இந்த அடையாளத்தை தக்க வைக்கும் ஓட்டத்தில் அவர் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால், இந்திய ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன. அவற்றை கட்டுப்படுத்த ஏதுமில்லை. பொறுப்பற்ற தன்மையுடன் அவை நடந்து கொள்கின்றன. நான் சொல்லாத ஒன்றை மீடியாக்கள் திரித்து சொல்லி வருகின்றன. நாள்தோறும் என்னை பற்றி அவதூறாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இவ்வாறு சசிதரூர் பேசினார் daylithanthi.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக