புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக, ஹரிஷங்கர் பிரம்மா இன்று பொறுப்பேற்கிறார்.
தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையரான தமிழகத்தைச் சேர்ந்த வி.எஸ்.சம்பத்
நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, அவருக்கு அடுத்த நிலையில்
இருக்கும் தேர்தல் ஆணையர் ஹரிஷங்கர் பிரம்மாவை புதிய தலைமைத் தேர்தல்
ஆணையராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். இன்று தலைமைத் தேர்தல் ஆணையராக
பொறுப்பேற்கவுள்ள பிரம்மா, அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது
பதவிக்காலம், வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முடிகிறது. இதனிடையே, பணி
ஓய்வு பெற்ற வி.எஸ். சம்பத், தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் தொடரும் என
நம்பிக்கை தெரிவித்துள்ளார். puthiyathalaimurai.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக