செவ்வாய், 13 ஜனவரி, 2015

ஜல்லிகட்டு தடை நீக்கம்? அறிவிப்பு வெளியாகும்!


மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்புத் துறையின் அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர் இன்று மதியம் டெல்லியின் பத்திரிக்கையாளர்களுக்கு விருந்து அளித்தார்.
இதில், அவரிடம் ஜல்லிக்கட்டு பற்றி தமிழகத்தின் செய்தியாளர்கள் முற்றுகையிட்டு கேள்விகளால் துளைத்தனர். இதற்கு சிரித்தபடியே நேரடியாக பதில் அளிக்காமல் ஜவடேகர் , ‘இது குறித்து விரைவில் ஒரு அரசு அறிவிக்கை வெளியாக உள்ளது’ என்று மட்டும் கூறிச் சென்று விட்டார். இது குறித்து ’தி இந்து’விடம் அதே விருந்தில் கலந்து கொண்ட அமைச்சகத்தின் அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், ‘காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் காளைகளை நீக்கி உத்தரவிடும்படி பிரதமர் நரேந்தர மோடி அறிவுறுத்தி உள்ளார். இதற்காக, நம் அமைச்சர் ஜவடேகரையும் நேரில் அழைத்து பேசினார். அதை தொடர்ந்து அதற்கான அரசு அறிவிக்கை வெளியிடும் பணி அதிரடியாக நடந்து வருவதால் அது, எந்நேரமும் வெளியாகும்.’ எனக் கூறுகின்றனர்.

மக்களவை தேர்தலுக்கு பின் மத்திய அரசு தீவிரமாக தமிழக அரசியலின் மீது காட்டும் ஆர்வம், ஜல்லிகட்டு மீண்டும் நடத்த சாதகமாக அமைந்து விட்டதாகவும், கடந்த ஆட்சியில் காளைகள் அப்பட்டியலில் சேர்க்கப்பட்டதை மக்கள் முன் வெளிக்காட்டும் வகையிலும் இந்த செயல் அமைந்து விட்டதாகவும் கருதப்படுகிறது.
முன்னதாக, ஜல்லிகட்டு மீண்டும் நடத்தப்படும் என அறிவிப்பளித்த தமிழக அரசு அதன் மீதான தடையை நீக்கும் பொருட்டு தனது அரசு அதிகாரிகளை நேற்று டெல்லிக்கு அனுப்பி இருந்தது. இவர்கள், மத்திய அரசு அதிகாரிகளுடன் நேற்று டெல்லியில் பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியானது. ஜல்லிகட்டு மீதான தடை கடந்த மே 7 ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பினால் ஏற்பட்டதுtamil.hindu.com

கருத்துகள் இல்லை: