சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர்
சட்டக்கல்லூரி கட்டிடத்தில் மெட்ரோ ரெயில் பணியால் விரிசல் அடைந்தது.
இதையடுத்து கட்டிடத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை சீரமைக்கவும், கல்லூரியை
வேறு இடத்திற்கு மாற்றம் செய்யவும் அரசு முடிவு செய்ததாக தெரிகிறது.இதற்கு
எதிர்ப்பு தெரிவித்து டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த
3–ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.சட்டக்கல்லூரி மாணவர்களின்
போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளும்
ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில், கடந்த
10 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சென்னை
சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இன்று
அறிவித்துள்ளனர். உயர் நீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து போராட்டத்த வாபஸ்
பெறுவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். dailythanthi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக