யானை தும்பிக்கையில் சிக்கிய விவசாயியை போராடி காப்பாற்றிய நாய்
கர்நாடகா, ராம்நகர் மாவட்டம், மாகடியின் சாவனதுர்கா வனப்பகுதியை ஒட்டியுள்ள, அடகமாரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லட்சுமி நரசிம்மய்யா, ஹனுமந்தய்யா, நரசய்யா; விவசாயிகள்.
அதே கிராமத்தில் கேழ்வரகு வயலில், நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்தனர்; உடன், அவர்களின் நாயும் இருந்தது. நள்ளிரவில், கூட்டமாக யானைகள் அப்பகுதிக்கு வந்தன. இதை பார்த்த நாய், குரைக்கத் துவங்கியது. சத்தம் கேட்டு விழித்த விவசாயிகள், மிரண்டு ஓடத் துவங்கினர். வயது முதிர்வால் ஓட முடியாமல் தவித்த நரசிம்மய்யா, யானை தும்பிக்கையில் சிக்கிக் கொண்டார்.
யானைப் பிடியில், விவசாயி சிக்கியதும் ஆவேசம் அடைந்த நாய், குரைத்தபடி யானைகளை மறித்தது; நரசய்யாவை பிடித்திருந்த யானையின் காலை கடித்து மறித்தது; மிரண்ட யானை, நரசிம்மய்யாவை விட்டு விட்டு வனத்துக்குள் ஓடியது.nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக