அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் கய்லா ஜீன் மியல்லர் (வயது
26). பெற்றோருக்கு ஒரே மகளான இவர், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில்
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி வந்தார். சிரியா நாட்டில் பணியாற்றி
வந்தபோது, கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் ஐ.எஸ். தீவிரவாதிகளால்
கடத்தப்பட்டார். அப்போதிருந்து அவர் தீவிரவாதிகளிடம் பணயக்கைதியாக இருந்து
வந்தார்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில், தனது பெற்றோருக்கு கடிதம் எழுதினார். அதைத்தவிர,
அவரைப் பற்றி ஒரு தகவலும் இல்லை.
இதற்கிடையே, சிரியா நாட்டில் ஜோர்டான் நடத்திய விமான தாக்குதலில் கய்லா
பலியாகி விட்டதாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் கடந்த வாரம் அறிவித்தது.
இந்நிலையில், அதனை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நேற்று உறுதிப்படுத்தினார்.
மேலும் அவர் கூறுகையில், ‘கய்லா கடத்தப்பட்டது மற்றும் மரணத்துக்கு காரணமான
தீவிரவாதிகளை கண்டுபிடித்து, நீதியின் முன்பு நிறுத்துவோம். அதற்கு
எவ்வளவு காலம் ஆகும் என்பது ஒரு பிரச்சினையே அல்ல’ என்றார். மாலைமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக