கிரிஸ்
கெய்ல், விராத் கோலி, கிளன் மேக்ஸ்வெல் , தோனி , சுனில் நரேன் ஆகியோர்
கடந்த ஐபிஎல்-லின் சென்சேஷன். அதிரடி ஆட்டத்தால் அனல் பறக்க வைக்கும்
இவர்களை " டேஞ்சரஸ் பிளேயர்கள் " என்று ரசிகர்கள் , கிரிகெட் நிபுணர்கள்
மற்றும் கமன்டேட்டர்கள் எப்போதுமே வர்ணிப்பதுண்டு. களத்தில் மட்டுமல்ல
இந்திய இணைய களத்திலும் இவர்கள் " டேன்ஜரஸ் பிளேயர்கள் " என்று கூறுகிறது
ஒரு புதிய தகவல் . கடந்த ஐபிஎல் சீசனின்போது மெக்கஃபே நிறுவனத்தால்
எடுக்கப்பட்ட சர்வேயில் இந்த தகவல் வெளியாகியுள்ளது
கிரிக்கெட் சீசன் தொடங்கினாலே பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களின் " டாக் " தங்கள் அபிமான வீரர்களைப் பற்றிதான் இருக்கும்.
அரசியல் பரபரப்புக்கு
பஞ்சமில்லாமல் இருந்தாலும், அதை மிஞ்சும் அளவுக்கு மக்களின் கவனம் உலகக்
கோப்பை மீது திரும்பி இருக்கிறது. வெற்றியோ தோல்வியோ எங்களுக்குத் தேவை
சிக்ஸர் மழை, ஃபோர் அலை என்று அதிரடி ஆட்டத்தின் மீது ரசிகர்கள் ஆர்வம் ஒரு
புறம் இருந்தாலும், விளையாட்டு வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை , ஹேர்
ஸ்டைல், ட்ரெஸிங்க், கிசுகிசுகள் என கண்ணில் எண்ணெய் விட்டுக் கொண்டு
பார்த்துக் கொண்டிருக்கிறது மற்றொரு ரசிகர் பட்டாளம். கிரிக்கெட் சீசன் தொடங்கினாலே பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களின் " டாக் " தங்கள் அபிமான வீரர்களைப் பற்றிதான் இருக்கும்.
இது போன்ற வைரல் தகவல்கள் கிளப்பிவிட பல ஆயிரம் இணையதளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. சீஸன் நெருங்க நெருங்க நெருங்க கூகுளில் பிளேயர்களின் வால்பேப்பர், செல்ஃபி , வீடியோ பதிவுகள், இவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவை அதிகமாக தேடப்பட்டு பதிவிறக்கப்படுகின்றன . 'இது பொதுவாக நடப்பதுதானே... இதிலென்ன ஆச்சர்யம்?' என்று நீங்கள் கேட்கலாம். ரசிகர்களின் இந்த ஆர்வத்தை பயன்படுத்தி சைபர் உலகில் ஒரு பெரிய தனி நபர் தகவல் திருட்டு நடந்து கொண்டிருக்கின்றது
" ஸ்டெகனோகிராஃபி " ( steganography) என்ற முறைப்படி வைரஸ் புரோகிராம்கள் கொண்ட ஒரு ஃபைலை மற்றொரு ஃபைலுக்குள் மறைத்து வைத்து , இணைய தளங்கள் வாயிலாக உலவ விடப்படுகிறது . தங்களுக்கு தேவையான தகவலை பதிவிறக்கம் செய்யும் பயன்பாட்டாளர்கள், இந்த வைரஸையும் சேர்த்து தங்கள் கணினியில் சேமிக்கின்றனர். பின் அவர்களின் கணினியில் உள்ள தகவல்கள் அனைத்தும் உருவப்படுகிறது. அதே கணினியில் ஆன்லைன் பேங்கிங் சேவையை பயன்படுத்தும் போது, உங்கள் பாஸ்வேர்டு வேறு ஒரு இடத்திலிருந்து இணையம் மூலம் மறைமுகமாக கைப்பற்றப்படுகிறது.
பாஸ்வேர்டு திருடப்பட்டால் அடுத்து என்ன?, உங்கள் சேமிப்பில் உள்ள பணம் எளிதாக திருடப்படுகிறது. புகைப்படங்கள் பதிவிறக்கம் செய்யப்படும் போது , jpeg ஃபைலுடன் வைரஸ் புரோகிராம்கள் இணைக்கப்படுகிறது . வீடியோக்களிலும் இதே முறைதான் பயன்படுத்தப்படுகிறது. திருட்டு என்பது பண பரிவர்த்தனைகளில் மட்டும் நடப்பதில்லை . தொழில் முறை தகவல்கள் , இ-மெயில் ஃபேஸ்புக் பாஸ்வேர்டுகள் திருட்டு, தனி நபர் ரகசியம் போன்றவையும் பறிக்கப்படுகிறது .
கடந்த ஆண்டு ஐபிஎல் சீசன் போது கெய்ல் பற்றிய தகவல்கள் அதிகமாக ரசிகர்களால் தேடப்பட்டுள்ளது . கெய்லின் போட்டோ, செல்ஃபி , டேன்ஸ் வீடியோக்கள் மூலம் வைரஸ்கள் அதிகமாக பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இதற்கு அடுத்தபடியாக விராத் கோலி, மேக்ஸ்வெல், தோனி, சுனில் நரேன் ஆகியோரின் தகவல்கள் ரசிகர்களால் அதிகம் தேடப்பட்டும், அதன் வழியாக வைரஸ்கள் பரப்பும் முயற்சியும் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது .
இணைய தளங்களை பயன்படுத்தும்போது இது போன்ற ஃப்ராட் தளங்களை சாதாரண பயன்பாட்டாளர்களால் கண்டறிய முடியாது. இது போன்ற ஆபத்தான தளங்களில் இருந்து நம்மை காக்க இணைய பாதுகாப்பு தரும் ஆண்டி வைரஸ் சாஃப்ட்வேர்களில் கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம் . அவை இது போன்ற இணைய தளங்களை கண்டறிந்து நமக்கு எச்சரிக்கை செய்யும். பாதுகாப்பு அம்சங்களை ஒருங்கே பெற்ற பிரவ்சர்களை பயன்டுத்துவதன் மூலம் இதிலிருந்து தப்பிக்கலாம்.
இந்தியாவை கலக்கும் ஐபிஎல்-லிலேயே இப்படின்னா, உலகை கலக்கும் உலகக் கோப்பைக்கு....
ரசிகர்களே பீ கேர் ஃபுல்!!!! /news.vikatan.com
-ரெ.சு.வெங்கடேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக