தமிழ்நாட்டு
சனல்களில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் சிறு குழந்தைகளுக்கான
இசைப்போட்டி நிகழ்ச்சி ஒன்று தற்போது நடைபெறுகிறது. ஜூனியர் சூப்பர்
சிங்கரைத் தேர்வு செய்யும் போட்டி அது.
இலங்கைத் தமிழ் மக்களாகிய நமது குணங்களிலொன்றைத் தெரியப்படுத்தும் விதமான சான்று உதாரணமொன்று அந்தப் போட்டி நிகழ்ச்சியில் காணக்கிடைத்தது.
இலங்கைத் தமிழ்ப் பெற்றோருக்கு கனடாவில் பிறந்த சிறுமி ஒருவரும், பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொண்ட அந்தப் போட்டியில் இந்தியக் குழந்தைகளுக்கு நிகரான இசைத்திறமை யோடு முதல் பத்துப் பேருள் ஒருவராக வந்திருக்கிறார். அது மிகவும் பாராட்டுக்குரியதே.
இசைவிற்பன்னர்களான நடுவர்கள் இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்குத் தகுதியான முதல் மூன்று பேரை அந்தப் பத்துப் பேரிலிருந்தும் தேர்வு செய்தார்கள். அதில் இலங்கைத் தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்த அந்தச் சிறுமி தேர்வாகவில்லை.
இறுதிப் போட்டிக்கு நால்வர் தெரிவுசெய்யப்பட வேண்டும். அடுத்துள்ள ஆறு குழந்தைகளிலிருந்து அந்த ஒருவரை ஜனநாயக முறைப்படி தெரிவு செய்வதற்காக, உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் மக்களிடமிருந்து அபிப்பிராய வாக்குகளைக் கோரியிருந்தார்கள்.
உலகம் முழுவதிலுமுள்ள தமிழ்த் தேசிய உணர்வு கொண்ட மக்கள், தொலைக்காட்சி நிறுவனத்தினரே அதிர்ந்து போகுமள வுக்கு அந்தக் கனடிய இலங்கைச் சிறுமிக்கு வாக்குகளை அள்ளிப் போட்டிருந்தார்கள். தமிழீழத்திற்கே வாக்களிப்பது போல எண் ணியிருப்பார்கள் போலும்!
தமிழ்த் தேசிய மக்களின் இந்தப் பேரலைபோலப் பொங்கிய உணர்ச்சிகர ஆதரவு இசை நடுவர்களைச் சிக்கலுக்குள்ளாக்கி விட்டது. அது இசைப் போட்டியல்லவா! இசைப் பாண்டித்திய நடுவர்களின் அபிப்பிராயப்படி இந்த ஜனநாயகத் தெரிவுக்குள்ளான சிறுமியைவிட, இசைத்திறமையில் மற்ற இரு சிறுமிகள் மேலான இடத்திலிருந்தார்கள்.
அவர்களைத் தவிர்த்துவிட்டு, இவரை இறுதிப்போட்டிக்கு அனுப் பினால், அது இசைத்திறமையைக் கணக்கில் கொள்ளாத இசைப் போட்டி ஆகிவிடும். எனவே, ஜனநாயகத்துக்கும் மரியாதை தந்து, திறமைக்கும் மரியாதை தந்து மூன்று பேரையுமே தேர்வுசெய்து வழமைக்கு மாறாக இறுதிப் போட்டிக்கு ஆறு பேரை அனுப்பினார்கள்.
தமிழ்த் தேசிய எழுச்சிப் பிரச்சினை இத்துடன் முடிந்துவிட வில்லை. மிகச் சிறந்த இசைப்பாடகராக இறுதியில் வெல்லும் அந்த ‘சூப்பர் சிங்கரை’த் தேர்வு செய்வதற்கும் உலகம் முழுவதிலு முள்ள தமிழ் மக்களே வாக்களிக்க வேண்டும். வெற்றிபெறும் சிறந்த இசைக் குழந்தை, பரவலான மக்கள் அபிப்பிராயப்படியும் முதலிடம் பெறுபவராக இருக்க வேண்டும் என்று இந்த ஏற்பாடு.
விஷயம் என்னவென்றால், நம் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் இப்போதும் மற்ற ஐந்து பேரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, நம் கனடிய இலங்கைச் சிறுமிக்கே வாக்குகளை ஏகமாக அளித்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.
தமிழ்நாட்டு இசைவிற்பன்னர்களுக்கு இது திணறலாகிவிட்டது. எனவே, இசைநடுவர்கள் திரும்பத் திரும்ப “இசையில் திறமை யுள்ள குழந்தை என்று நீங்கள் கருதுபவருக்கே தயவுசெய்து வாக்களியுங்கள்… வேறு காரணங்களுக்காக இசைப்போட்டியில் வாக்களிக்க வேண்டாம்…” என்று கேட்டுக் கொள்கிறார்கள்.
நடுவர்களில் ஒருவரான இசைக்குயில் சித்ரா, “தயவுசெய்து கண்களை மூடிக்கொண்டு அவர்கள் பாடுவதைக் கேளுங்கள். பாட்டில் திறமையுள்ள குழந்தைக்கே வாக்களியுங்கள்” என்று கிட்டத்தட்டக் கெஞ்சுகிறார்.
நம்மவர்கள் கேட்பார்களா? தமிழுணர்வு என்று வந்துவிட்டால், அவருக்குத் திறமை இருக்கிறதா, சரியானவரா, அவரைத் தெரிவு செய்வது நியாயந்தானா என்றெதையும் யோசியாமல்…. வாக்குகளைக் கண்ணை மூடிக்கொண்டு அள்ளிப் போட்டுவிட மாட்டார்களா!சலசலப்பு.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக