வியாழன், 3 ஏப்ரல், 2014

அழகிரி முன்னிலையில் இணைந்த அ.தி.மு.க.வினர்! அ.தி.மு.க.வினர் அழகிரி பக்கம் தாவியது ஏன் ?


அ.தி.மு.க. மேடைகளில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கானோர் கட்சியில் சேர்வதாக அ.தி.மு.க. தரப்பில் கூறுவது உண்டு. ஆனால், நேற்று மதுரையில் தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட அழகிரியை மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள மேலக்கால் ஜெயலலிதா பேரவை துணைத் தலைவர் முருகன் தனது ஆதரவாளர்கள் 150 பேருடன் மதுரையில் உள்ள அழகிரி வீட்டுக்குச் சென்று அ.தி.மு.க. உறுப்பினர் கார்டுகளை ஒப்படைத்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதுதவிர, குருவித்துரை ஊராட்சித் துணைத் தலைவர் பன்னீர், அ.தி.மு.க. விவசாய அணிச் செயலாளர் ஜெயபாண்டி ஆகியோர் தலைமையில் பெண்கள் உள்பட 60 பேர் அழகிரியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.ஏங்க மதுரைல என்னங்க நடக்குது ? 
?
தேனி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கத்தை 4-வது இடத்துக்குத் தள்ள வேண்டும் என அழகிரி கூறி வந்த நிலையில், நேற்று அழகிரியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க.வினர், தேனி தொகுதியில் மதி.மு.க. வேட்பாளர் அழகுசுந்தரத்துக்கு ஆதரவாக தேர்தல் பணி ஆற்றுவதாக உறுதி அளித்தனர்.
அ.தி.மு.க.வினர் அழகிரிக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்தது மதுரை மாவட்ட அ.தி.மு.க.வை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தத் தகவல் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் மேலக்கால், குருவித்துறை பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்தார்.
இதற்கிடையே, அ.தி.மு.க.வினர் கட்சி மாறிய சம்பவம் குறித்து உளவுத்துறையால் அ.தி.மு.க. தலைமைக்கு நேற்று அவசரமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வினர் அழகிரி பக்கம் தாவியது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கட்சி மேலிடம் உத்தரவிடும் எனத் தெரிகிறது.
viruvirupu.com

கருத்துகள் இல்லை: