ஜெ.’மீதான சொத்துக் குவிப்பு வழக்கு உச்சகட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில்,
அரசு வழக்கறிஞர் பவானிசிங், சாட்சிகளின் அடிப்படையில்
எடுத்துவைத்திருக்கும் சாட்சியங்கள், ஜெ’தரப்பின் சொத்துக் கணக்கை
அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
ஜெ. முதல்வராக இருந்த 91-96 காலகட்டத்தில் வரு மானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்களை வாங்கிக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு தான் தற்போது ஜெ.’ தரப்பை கலவரப்படுத்திக்கொண்டு இருக்கிறது.
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா முன்னிலையில் நடக்கும் இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் 24-ந் தேதி தொடங்கி நான்கு நாட்கள், சாட்சிகளின் சாட்சியங்களை அரசு வழக்கறிஞர் பவானிசிங் எடுத்து வைத்தார். முன்னதாக அவர் வைத்த வாதத்தின்போதே ‘இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஆவர். இவர்களில் முதலாவது குற்றவாளி (ஜெ.)யும் இரண்டாவது குற்றவாளி சசி)யும் ஒரே வீட்டில் வசித்தார்கள் என் பதற்கான 9 ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இவர் கள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர் கள் என்பதற்கான பல கம்பெனிகளின் ஆவணங்கள் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
அதன் மூலம் நான்கு குற்றவாளிகளும் கூட்டுச்சதி செய்து, முதல் குற்றவாளி முதலமைச்சராக இருந்தபோது, அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவருக்காகவும் அவரைச் சேர்ந்த 3 குற்றவாளிகளுக் காகவும் தங்களது வருமானத்துக்கு அதிகமான சொத்துக் களைச் சேர்த்திருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். ;24-ந் தேதி அரசு வழக்கறிஞர் பவானிசிங், ‘தனது உடல்பாதிப்பு காரணமாக தனக்கு பதில் தனது உதவியாளர் முருகேஷ் மரடி வாதம் செய்வார்’ என்றார். இதற்கு ஜெ.’ தரப்பு வழக்கறிஞர் கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நீதிபதி குன்ஹாவோ அதை அனுமதித்தார். இதைத் தொடர்ந்து வழக்கறிஞர் முருகேஷ் மரடி, சாட்சியங்களைப் படித்துக் காண்பித் தார். அதில் குற்றவாளிகள் பல நிறுவனங்களை வாங்கி யதற்கான ஆவணங்கள் குறித்தும், அந்த நிறுவனங்களின் பெயரிலேயே பல அசையாச் சொத்துக்கள் வாங்கப் பட்டுள்ள விபரங்களையும் அவர் படித்துக்காட்டினார்.. குறிப்பாக இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு சொந்தமான பங்களாவுடன் கூடிய 22 ஏக்கர் நிலத்தை, சுதாகரன் மிரட்டி வாங்கியது குறித்து அளிக்கப்பட்ட சாட்சியத்தினைப் படித்துக்காட்டினார். அதோடு சனிக்கிழமை கோர்ட் நிகழ்ச்சிகள் முடிந்தன.
அடுத்தடுத்த நாட்களில் ஆஜரான அரசு வழக்கறிஞர் பவானிசிங் ""வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருப்பவர்களின் பொருளாதார நிலைக்கும் அவர்கள் வாங்கிக் குவித்துள்ள நிலங்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை. nakheeran.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக