மதுரையில் நாளை மறுநாள் நடக்கும் இளையராஜாவின் சங்கீதத் திருநாள்
நிகழ்ச்சியின் டிக்கெட்டை ரூ 2.5 லட்சம் கொடுத்து வாங்கியிருக்கிறார் ஒரு
இசை ரசிகர்.
அவருக்கு இளையராஜாவே தன் கையால் இந்த டிக்கெட்டை வழங்கினார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்டமாக ஒரு இசை
நிகழ்ச்சியை நடத்துகிறார் இளையராஜா. அவருடைய மகன் கார்த்திக் ராஜா ஏற்பாடு
செய்துள்ள நிகழ்ச்சி இது.
இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன.
இளையராஜாவின் சங்கீதத் திருநாள் என்ற தலைப்பில் நடக்கும் இந்த
நிகழ்ச்சிக்கு ரூ 1 லட்சத்துக்கும் அதிகமாக விலைகொடுத்து டிக்கெட்
வாங்குவோருக்கு இளையராஜாவே தன் கையால் டிக்கெட்டைத் தருவார் என
அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, மதுரையைச் சேர்ந்த இளையராஜாவின் ரசிகர் ஒருவர் ரூ 2.5
லட்சம் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளார்.
இதுகுறித்து இளையராஜா கூறுகையில், "ரசிகர்களின் ஆர்வம் என்னை பிரமிக்க
வைக்கிறது. மதுரை மக்களைச் சந்திக்க நானும் வெகு ஆவலாக உள்ளேன். பெரிய விலை
கொடுத்து டிக்கெட் வாங்கி வருகிறார்கள். அவர்களையெல்லாம்
திருப்திப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக இருக்கும்,"
என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் மதுரை கீஷ்டு கானம் உள்ளிட்ட கடைகளில்
கிடைக்கின்றன
tamil.oneindia.in ர்
tamil.oneindia.in ர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக