மாணவி கற்பழித்து கொலை;
காதலனை அடித்துக்கொன்ற உறவினர்கள் சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ளது மலையாலபட்டி கிராமம். இங்குள்ள கருங்காடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி, மலைவாழ் மக்கள் சமூகத்தை சேர்ந்த இவர் விவசாய கூலிவேலை செய்துவருகிறார். இவரது மகள் சங்கீதா (வயது-15), நாமக்கல் மாவட்டம், மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11- வகுப்பு படித்து வருகிறார்.கந்தசாமியின் உறவுக்கார பையன் சின்னராசு (வயது-18) இவர் சேலம், வாழப்பாடி போன்ற வெளியூர்களில் கட்டிட கொத்து வேலைக்கு சென்றுவருகிறார். இவர் சங்கீதாவை காதலித்து வந்துள்ளார். இரண்டு குடும்பத்தினருமே உறவினர்கள் என்பதால் இதைப்பற்றி யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.இந்த நிலையில், கடந்த 31-ம் தேதி பள்ளிக்கு சென்ற சங்கீதா மாலையில் வீட்டுக்கு திரும்பி வரவில்லை, அதே நேரத்தில், சின்னராசுவும் ஊரிலிருந்து காணாமல் போய்விட்டார். வழக்கமாக சின்னராசு வேலைக்கு போகும் இடங்களிளெல்லாம் போய் தேடிய உறவினர்கள் சின்னராசு-சங்கீதா இருவரும் ஓடிப்போய் விட்டதாக முடிவு செய்துகொண்டு அவர்களாகவே திரும்பி வரட்டும் பிறகு பார்த்க்கொள்ளலாம் என்று முடிவு செய்துகொண்டு காவல் நிலையத்தில் கூட புகார் கொடுக்காமல் இருந்துகொண்டனர்..> இந்த நிலையில், நேற்று மாலை நான்கு மணிக்கு சின்னராசு மட்டும் தனியாக ஊருக்கு வந்துள்ளார். அப்போது, கந்தசாமி மற்றும் அவரது உறவினர்கள் சங்கீதா எங்கே ? என்று கேட்டபோது, எனக்கு தெரியாது என்று சின்னராசு சொல்லியுள்ளார்.
பின்னர், அங்கிருந்த சிலர் சின்னராசுவை பிடித்து உதைத்து விசாரித்ததில், தான் வெளியூர் சென்ற அன்று பக்கத்திலிருக்கும் ஒரு கரட்டுப்பகுதியில் சங்கீதாவை பார்த்ததாக சொல்லியுள்ளார். அங்கிருந்த சங்கீதாவின் உறவினர்கள், சின்னராசுவை கூட்டிகொண்டு அவர் சுட்டிகாட்டிய மலைப்பகுதிக்கு கூட்டிபோய் பார்த்தபோது, ஒரு பாறையின் மீது மாணவி சங்கீதா பிணமாக கிடந்துள்ளார்.
அவரது, உடலில் பல இடங்களில் நகக்கீறல் காயங்கள், சங்கீதா அணிந்திருந்த உடைகள் தாறுமாறாக கிழிக்கப்பட்டு அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது தெரிந்துள்ளது.
மாணவி சங்கீதா கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் ஆனா நிலையில் அலங்கோலமாக கிடந்த சங்கீதாவின் உடலை பார்த்ததும், அவரது தந்தை கந்தசாமி மற்றும் அவரது உறவினர்கள் சின்னராசுவை அந்த இடத்திலேயே போட்டு அடித்து உதைத்ததில், அவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
பின்னர், வாழப்பாடி போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சங்கீதா மற்றும் சின்னராசு ஆகிய இருவரின் உடலையும் கைபற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார்கள்.
இது தொடர்பாக சங்கீதாவின் அப்பா கந்தசாமி உள்ளிட்ட பத்துபேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள வாழப்பாடி போலீசார் அவர்களை தேடிவருகின்றனர் nakkheeran.in/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக