புதன், 2 ஏப்ரல், 2014

ராமன்சிங், சிவராஜ்சிங் சவுகான் போலத்தான் மோடியும் ஒருவர்.. தாக்கும் அத்வானி


மும்பை: மூன்று முறை தொடர்ச்சியாக தேர்தலில் வென்றவர் மோடி மட்டும் அல்ல என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவர் அத்வானி தனது தேர்தல் பிரச்சாரத்தை மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரில் இருந்து நேற்று துவக்கினார்.  அப்போது அவர் கூறுகையில், தேர்தலில் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்றவர் மோடிஜி மட்டும் அல்ல. மேலும் இரண்டு பாஜகவினரான மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் ஆகியோரும் தொடர்ச்சியாக மூன்று முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். மோடி மத்தியில் ஆட்சி அமைத்து நாட்டின் முகத்தையே மாற்றுவார். பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டக் கோரி நான் 1990ம் ஆண்டு ரதயாத்திரை கிளம்பியபோது எனக்கு துணையாக வந்தவர் மோடி தான். பிரதமர் மன்மோகன் சிங் அதிகாரமிக்க பதவியில் இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளார். நாங்களும் மூன்று புதிய மாநிலங்களை உருவாக்கினோம். ஆனால் தெலுங்கானா போன்று பிரச்சனை ஏற்படவில்லை. பொக்ரான் வெடிகுண்டு சோதனைக்கு பிறகு அமெரிக்கா பொருளாதார கட்டுப்பாடு விதித்தபோதிலும் கூட பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருந்தோம் என்றார். அத்வானியின் பிரச்சார கூட்டத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய பாஜக தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்த
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: