கடும் மின்வெட்டால் ஜாப் ஆர்டர்களை இழந்த இவர், மேலும் நஷ்டத்தை தாங்க முடியாமல், இரு வாரம் முன்பு ஆலையை இழுத்து பூட்டிவிட்டு செக்யூரிட்டி வேலைக்கு சென்று வருகிறார். செல்வம் கூறியதாவது: கம்பெனி, வீடு வாடகை, வங்கி வட்டி, குழந்தைகள் கல்வி கட்டணம் என எல்லா செலவுகளும் போக மாதம் ரூ.5 ஆயிரம் லாபம் கிடைத்தது. தற்போது பகலில் 4 மணி நேரம்கூட தொடர்ச்சியாக மின்சாரம் இல்லை.http://www.tamilmurasu.org/index.asp
குறைந்தது 8 மணி நேரமாவது தொடர்ச்சியாக மின்சாரம் இருக்க வேண்டும். நன்றாக சூடேறி இயந்திரங்கள் இருக்கும்போது மின்சாரம் போய்விட்டால் அதை தயார்படுத்த மேலும் 2 மணி நேரம் ஆகும். தற்போது ஆலையை இயக்க முடியவில்லை. இதர பிளாஸ்டிக் மோல்டு நிறுவனங்களும் மின்வெட்டால், அடியோடு முடங்கி விட்டன. மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. வங்கியில் நகைகளை அடமானம் வைத்து ரூ.1 லட்சம் கடன் வாங்கினேன். வட்டிகூட செலுத்த முடியவில்லை.
தொழிலாளர்களுக்கு கடன் வாங்கி தீபாவளி போனஸ் கொடுத்தேன். இனிமேல் ஆலையை நடத்த முடியாது என்ற நிலை வந்ததால், செக்யூரிட்டி வேலைக்கு செல்ல துவங்கி விட்டேன். மாதம் ரூ.8 ஆயிரம் சம்பளம் தருவதாக கூறியுள்ளனர். கடும் மின்வெட்டால், பெரிய தொழிலதிபராக வேண்டும் என்ற எனது கனவு கலைந்துவிட்டது. மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், தொழில்கள் அனைத்தும் காணாமல் போய்விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக