புதுடில்லி: படிப்பறிவு குறைவானவர்களை கொண்டு ஆக்ஸிஜன்சிலிண்டர்கள்
மாற்றியதால் ஏற்பட்ட விபரீதத்தில் நான்கு நோயாளிகள் பலியாயினர்.
இதனையடுத்து நோயாளிகளின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை
முற்றுகையிட்டனர். இச்சம்பவம்பற்றிய விபரம் வருமாறு:
புதுடில்லியில் அரசுக்கு சொந்தமான சுஷ்ருத் மருத்துவமனை இயங்கி
வருகிறது. இங்கு புதுடில்லியை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெற்று
வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை இன்டென்சிவ் கேர் யூனிட் பகுதியில்
அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் அளவு பற்றாக்குறை
காரணமாக நான்கு நோயாளிகள் பலியாயினர். இந்த பிரிவில் நோயாளிகளை
கவனிப்பதற்கு என்று தொழில்நுட்ப பணியாளர் மற்றும் உதவியாளர்
நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் உதவியாளர் வெறும் எட்டாம் வகுப்பு மட்டுமே
முடித்துள்ளதாக கூறப்படுகிறது. வழக்கம் போல் நோயாளிகளுக்கு தேவைப்படும்
ஆக்ஸிஜன் அளிப்பதற்கான சிலிண்டர்கள் மாற்றும் போது முறையான வழிமுறைகளை
பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.http://www.dinamalar.com/இதன்காரணமாக நோயாளிகளுக்கு குழாய் மூலம் செல்ல வேண்டிய ஆக்ஸிஜன் செல்லாததால் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்க வில்லை. இதன் காரணமாக 4 நோயாளிகள் பலியாயினர். மேலும் மூத்த மருத்துவர் ஒருவர் இதனை கவனித்ததால் ஐந்தாவது நோயாளி ஒருவர் மீட்கப்பட்டு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஏ.கே. வாலியா மூன்று நபர்கள் கொண்ட குழு விசாரணை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழுவினர் மூன்று நாட்களில் அறிக்கையை தாக்கல் செய்வர் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக