சிவகங்கை
மாவட்டம் திருப்பாச்சேத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன்
ரவுடிகளால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக
புதுக்குளத்தைச் சேர்ந்த பிரபு, பாரதி உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மதுரை மத்திய சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பிரபு மற்றும் பாரதி நேற்று போலீசாரால்
என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் வழக்கில் தொடர்புடைய மற்ற கைதிகளிடையே பெரும் அச்சத்தை
ஏற்படுத்தி உள்ளது. மதுரை சிறையில் இருக்கும் அவர்கள் இன்று காலை உணவு உண்ண
மறுத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறை வளாகத்தில் உள்ள மரங்களில் ஏறிய அவர்கள் அங்கு நின்று கொண்டு போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும், போலீசாரால் ஆபத்து உள்ளது என்றும் அவர்கள் கூறினர். இந்த போராட்டத்தால் சிறையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.http://www.nakkheeran.in/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக