வெள்ளி, 7 டிசம்பர், 2012

சுஹாசினி சரத்குமார், முதல்வர் 50 லட்சத்தை தூக்கிக் கொடுத்துள்ளார்

 சென்னை சர்வதேச திரைப்பட விழா திறனாய்வு மற்றும் கொண்டாட்டம் மக்கள் வரிப்பணத்தில் கூத்து 
தமிழக முதல்வர் வெள்ளிக்கிழமை(07.12.2012) தலைமைச் செயலகத்தில், சென்னையில் நடைபெறவுள்ள 10-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்காக தமிழக அரசின் சார்பில் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளர் தங்கராஜிடம் வழங்கினார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகம் சார்பில் 10-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா 12.12.2012 முதல் 20.12.2012 வரை நடைபெறவுள்ளது. இந்த திரைப்பட விழாவில் 54 நாடுகளில் தயாரிக்கப்பட்ட 172 திரைப்படங்கள், 8 நாட்களில் 8 திரையரங்குகளில் திரையிடப்படும்.10-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு கடந்த ஆண்டைப் போன்றே வழிகாட்டுதலும், ஆதரவும், நிதியுதவியும் அளித்திடுமாறு இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளர் முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.அந்தக் கோரிக்கையை பரிசீலித்த முதல்வர், இந்த ஆண்டு சென்னையில் நடைபெறவுள்ள 10-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்காக தமிழக அரசின் சார்பில் 50 லட்சம் ரூபாய் அனுமதித்து ஆணையிட்டிருந்தார்.
இந்தத் தொகைக்கான  காசோலையை இன்று(07.12.2012) தலைமைச் செயலகத்தில் இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளர் தங்கராஜிடம் முதல்வர் வழங்கினார்.இந்நிகழ்வில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும், திரைப்பட நடிகருமான ஆர். சரத்குமார், எம்.எல்.ஏ., திரைப்பட நடிகை சுஹாசினி மணிரத்னம், இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளர் நு. தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அவர்கள் முதல்வரை 10-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவினை தலைமையேற்று நடத்தித் தர கேட்டுக் கொண்டு, இத்திரைப்பட விழாவிற்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இருமடங்கு நிதியுதவி வழங்கியமைக்காக நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது சென்னை: சென்னை திரைப்பட விழா என்ற பெயரில் சரத்குமாரை பின்னணியில் கொண்டு இயங்கும் தனியார் நிகழ்வுக்காக ரூ 50 லட்சத்தை தூக்கிக் கொடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இத்தனை இந்த நிகழ்ச்சி பொதுமக்கள் பார்க்க இலவசமாக நடத்தப்படுவதில்லை. பெரிய தொகையை கட்டணமாகப் பெற்றுக் கொண்டு பார்க்க அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்பட விழாவிற்காக தமிழக அரசின் சார்பில் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளர் தங்கராஜிடம் முதல்வர் வழங்கினார். இந்த காசோலை வசூல் நிகழ்வில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும், திரைப்பட நடிகருமான ஆர். சரத்குமார், எம்.எல்.ஏ., திரைப்பட நடிகை சுஹாசினி மணிரத்னம், விழாவை நடத்தும் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த விழாவுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இருமடங்கு நிதியுதவி வழங்கியுள்ளார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல, கருணாநிதி முதல்வராக இருந்த போது, எஸ்வி சேகருடன் போய் ரூ 25 லட்சத்தை இந்த தங்கராஜ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த நிதி எதற்காக செலவழிக்கப்படுகிறது... அதன் பலன் என்ன என்பதெல்லாம்... மூச்! ஆத்துல போற தண்ணி.. அய்யா குடி அம்மா குடி என்றொரு பழமொழி உண்டு. அதை நிரூபிக்கிறார்கள்!


சென்னை: சென்னை திரைப்பட விழா என்ற பெயரில் சரத்குமாரை பின்னணியில் கொண்டு இயங்கும் தனியார் நிகழ்வுக்காக ரூ 50 லட்சத்தை தூக்கிக் கொடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இத்தனை இந்த நிகழ்ச்சி பொதுமக்கள் பார்க்க இலவசமாக நடத்தப்படுவதில்லை. பெரிய தொகையை கட்டணமாகப் பெற்றுக் கொண்டு பார்க்க அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்பட விழாவிற்காக தமிழக அரசின் சார்பில் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளர் தங்கராஜிடம் முதல்வர் வழங்கினார். இந்த காசோலை வசூல் நிகழ்வில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும், திரைப்பட நடிகருமான ஆர். சரத்குமார், எம்.எல்.ஏ., திரைப்பட நடிகை சுஹாசினி மணிரத்னம், விழாவை நடத்தும் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த விழாவுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இருமடங்கு நிதியுதவி வழங்கியுள்ளார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல, கருணாநிதி முதல்வராக இருந்த போது, எஸ்வி சேகருடன் போய் ரூ 25 லட்சத்தை இந்த தங்கராஜ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த நிதி எதற்காக செலவழிக்கப்படுகிறது... அதன் பலன் என்ன என்பதெல்லாம்... மூச்! ஆத்துல போற தண்ணி.. அய்யா குடி அம்மா குடி என்றொரு பழமொழி உண்டு. அதை நிரூபிக்கிறார்கள்!

Read more at: http://tamil.goodreturns.in/news/2012/12/07/cm-donates-rs-50-lakhs-chennai-film-000529.html

கருத்துகள் இல்லை: