புதுடில்லி :"நேரடி மானிய திட்டம், புதிய விஷயமல்ல; கடந்த, பட்ஜெட்
கூட்டத் தொடரின்போதே, இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டது' என,
மத்திய அரசு, தேர்தல் கமிஷனிடம் தெரிவித்துள்ளது.
பல்வேறு திட்டங்களுக்காக, அரசு வழங்கும் மானிய தொகையை, "ஆதார்' அடையாள அட்டை திட்டம் மூலமாக, நேரடியாக, சம்பந்தப்பட்ட பயனாளிகளின், வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது.முதல் கட்டமாக, 51 மாவட்டங்களில், இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், குஜராத்தை சேர்ந்த, நான்கு மாவட்டங்களும் அடங்கும். இதற்கு, பா.ஜ., தரப்பில், கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. "தற்போது குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்த நேரத்தில், மானிய திட்டம் குறித்த, அறிவிப்பை வெளியிட்டது, தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல்' என, தேர்தல் கமிஷனிடம், பா.ஜ., தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. http://www.dinamalar.com/
இந்நிலையில்,
"குஜராத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள், அமலில் உள்ள நிலையில், மானிய
திட்டம் குறித்த, அறிவிப்பு வெளியிட்டது ஏன் என, விளக்கம் அளிக்க வேண்டும்.
இல்லையெனில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய அமைச்சரவை
செயலகத்துக்கு, தேர்தல் கமிஷன் சார்பில் கடிதம் எழுதப்பட்டது.பல்வேறு திட்டங்களுக்காக, அரசு வழங்கும் மானிய தொகையை, "ஆதார்' அடையாள அட்டை திட்டம் மூலமாக, நேரடியாக, சம்பந்தப்பட்ட பயனாளிகளின், வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது.முதல் கட்டமாக, 51 மாவட்டங்களில், இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், குஜராத்தை சேர்ந்த, நான்கு மாவட்டங்களும் அடங்கும். இதற்கு, பா.ஜ., தரப்பில், கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. "தற்போது குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்த நேரத்தில், மானிய திட்டம் குறித்த, அறிவிப்பை வெளியிட்டது, தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல்' என, தேர்தல் கமிஷனிடம், பா.ஜ., தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. http://www.dinamalar.com/
இதற்கு, மத்திய அரசு அளித்த பதில்:
கடந்த, பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே, நேரடி மானிய திட்டம் குறித்த அறிவிப்பை, அப்போதைய நிதி அமைச்சர், பிரணாப் முகர்ஜி, வெளியிட்டு விட்டார். எனவே, இது புதிய திட்டம் அல்ல; குஜராத் தேர்தலுக்கும், இந்த திட்டத்துக்கும், எந்த தொடர்பும் இல்லை.இது தொடர்பாக, திட்ட கமிஷன் தெரிவித்த விவரங்களையும், சமர்ப்பித்துள்ளோம். இதுகுறித்த, அதிகப்படியான தகவல்களை, திட்ட கமிஷன் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் பதில் குறித்து, தேர்தல் கமிஷன், நேற்று விவாதித்தது. ஆனாலும், இந்த விவகாரத்தில் முடிவு எடுப்பதை, வேறு ஒரு தேதிக்கு, தேர்தல் கமிஷன் ஒத்தி வைத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக