கேரளா மாநில சிறுமி,
பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு,
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தி.மு.க., முன்னாள்
எம்.எல்.ஏ., ராஜ்குமார் உட்பட நான்கு பேருக்கு மருத்துவ பரிசோதனை
மேற்கொள்ள, பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.
கேரள மாநிலம் இடுக்கி
மாவட்டம் லாட்ரக் எஸ்டேட் லட்சுமி கோவில் அருகே உள்ள பீர்மேடு பகுதியை
சேர்ந்த சந்திரன், 49, என்பவரது மூன்றாவது மகள் மேகலா, 15, (பெயர்
மாற்றப்பட்டுள்ளது), பெரம்பலூர் முன்னாள், தி.மு.க., எம்.எல்.ஏ.,
ராஜ்குமார் வீட்டில் தங்கி இருந்தபோது, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை
செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து,
மேகலாவின் அப்பா சந்திரன் கொடுத்த புகாரின்பேரில், முன்னாள் எம்.எல்.ஏ.,
ராஜ்குமார், ஜெய்சங்கர், அன்பரசன், மகேந்திரன், புரோக்கர் பன்னீர்செல்வம்
உட்பட, ஆறு பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து,
முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார், ஜெய்சங்கர், அன்பரசன், மகேந்திரன் ஆகிய
நான்கு பேரும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில்
அடைக்கப்பட்டனர்.இவ்வழக்கில் தொடர்புடைய பெரம்பலூர், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார் மற்றும் ஜெய்சங்கர், அன்பரசன், மகேந்திரன் ஆகிய நான்கு பேருக்கும், மருத்துவ பரிசோதனை செய்வதற்காக, நீதிம ன்றம் அனுமதி வழங்கக்கோரி, பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சர்புதீன், பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில், நேற்று முன்தினம், மனுத்தாக்கல் செய்தார்.முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார், ஜெய்சங்கர், அன்பரசன், மகேந்திரன் ஆகிய நான்கு பேருக்கும், திருச்சி அரசு மருத்துவமனையில், பரிசோதனை செய்ய அனுமதி வழங்கி, பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, சுரேஷ் நேற்று உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக