திங்கள், 8 ஆகஸ்ட், 2011

மகனை காப்பாற்ற முனைந்த தாயை மகன் முன்னே புலிகள்

பொதுமகன் சார்ள்ஸா
நான் கிளிநொச்சியில் 34 வருடங்களாக வாழ்கின்றேன். வன்னியில் நடந்த சகல விடங்களையும் நான் என் மனங்களில் பதிவு செய்து கொண்டுள்ளேன். புலிகள் எம்மை மனித கேடயங்களாக வைத்திருந்தார்கள். அவர்களிடமிருந்து மக்கள் தப்ப முயன்ற சம்பவங்கள் ஏராளம் .. ஏராளம். அவ்வாறு தப்ப முயன்ற மனித உயிர்கள் பெறுமதியற்றுப்போயின.
நான் எனது கண்காளல் கண்டேன், ஓர்இரவு 1 மணியளவில் மணல் கட்டுகளை தாண்டி தப்பியோட முனைந்த இரு இளைஞர்களை புலிகள் சுட்டுக்கொன்றனர். அவர்கள் செய்த தவறு யாது. அவர்கள் எந்த குற்றமும் இழைக்காத இளைஞர்கள. தமது உயிரை காக்க முனைந்தது புலிகளின் இராட்சியத்தில் தவறாக பட்டது. சுட்டுக்கொன்றார்கள். மகனை காப்பாற்ற முனைந்த தாயை மகன் முன்னே புலிகள் கைகளை பொல்லுகளால் கதறக்கதற அடித்து உடைத்தார்கள.; இவையாவும் நான் எனது கண்களால் கண்டவை என்கின்றார் சாள்ஸ்

கருத்துகள் இல்லை: