செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

அரசு பதில் அளிக்கப் போவதில்லை; அமைச்சர் பசில் ராஜபக்­ஷ அறிவிப்பு

செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-08-08 13:32:26| யாழ்ப்பாணம்]
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விதித்துள்ள நிபந்தனைகளுக்கு அரசு ஒருபோதும் பதிலளிக்கப் போவதில்லை. இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்­ஷ தெரிவித்துள்ளார். வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பசில் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் மூன்று முக்கிய விவகாரங்கள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இரு கிழமைகளுக்குள் எழுத்துமூலம் தெரிவிக்க வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.

இந்நிலையில், போர் இடம்பெற்ற காலத்தில் அப்பாவித் தமிழ் மக்களுக்காக எதனையும் செய்யாத கட்சி தற்போது தமிழ் மக்களைப் பயன்படுத்தி அரசியல் செய்ய முனைப்புக் காட்டுகின்றது. போரின் பின்னரான இலங்கையின் ஸ்திரத்தன்மையை குழப்பும் முயற்சிகளுக்கு இடமளிக்க மாட்டாது.

அத்துடன் குறுகிய அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது. தமிழ் பேசும் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் செயற்பட்டு வருகின்றபோதிலும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் பிரிவினவாதக் கொள்கைகளை முன்னெடுப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்

கருத்துகள் இல்லை: