வெள்ளி, 22 ஜூலை, 2011

Tax Raid மம்முட்டி,மோகன்லால் வீடுகளில் ஐடி ரெய்டு.சென்னை, பெங்களூர், கொச்சி ஆகிய நகரங்களில் இவர்களுக்குச் சொந்தமான டுகள்

சென்னை: மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோரது வீடுகளில் இன்றுகாலையில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு மேற்கொண்டனர்.

சென்னை, பெங்களூர், கொச்சி ஆகிய நகரங்களில் இவர்களுக்குச் சொந்தமான வீடுகள் உள்ளன. இங்கு காலையில் புகுந்த தனித் தனி அதிகாரிகள் படையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். வீடுகள் மட்டுமல்லாமல், அலுவலகங்களிலும் ரெய்டு நடந்தது.

சோதனை குறித்து இரு நடிகர்களுக்கும் முறைப்படியான தகவல் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த சோதனையின்போது கைப்பற்றப்படும் ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்து இரு நடிகர்களுக்கும் முறைப்படி தெரிவிக்கப்படும் என வருமான வரித்துறை வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.


எது தொடர்பாக இந்த ரெய்டு என்பது தெரியவில்லை. இந்த ரெய்டு காரணமாக மலையாளத் திரையுலகில் பரபரப்பு நிலவுகிறது.

இந்த மலையாள சினிமா மாபியாக்கள் உலக நாடுகளில் குறிப்பாக துபாயில் பெரும் வியாபாரத்தை வைத்துள்ளார்கள். அங்கும் ஒருக்கா ரெய்டு பண்ணினால் தேவல, ஒரு சாதாரண சகிலா படத்தை சட்ட விரோதமாக ஓட விடாமல் செய்தது அட அதுதான் போகட்டும், பழம்பெரும் நடிகனான திலகனை மலையாள படத்தில் மட்டும் அல்ல தமிழ் படத்தில் கூட நடிக்க விடாமல் ஓட ஓட துரத்திய கொடியவர்கல்தான் இந்த மம்மூட்டியும் மோகன்லாலும்,
சதா தர்ம நியாயங்களை தங்கள் படங்களில் பேசும் இந்த அயோக்கிய சிகாமணிகள்  சொந்த வாழ்வில் வடித்தெடுத்த சுயநல வாதிகள்.

கருத்துகள் இல்லை: