செவ்வாய், 19 ஜூலை, 2011

அரசின் நன்மைகளை பெறுவது அடிமைத்தனமா?பாதிக்கப்பட்டுள்ள மக்கள்

யுத்தத்தின் முழுப்பாதிப்புக்களையும் சுமந்த மக்கள் அரசுக்கு வரி செலுத்துகின்ற மக்கள் தங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் தாங்கள் வாழும் பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் அரசின் நன்மைகளை பெறுவது அடிமைத்தனமா? என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளார். இன்று (18) கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு  துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் தனது நாட்டில் உள்ள அனைத்து மக்களின் அபிவிருத்திக்கும் மேம்பாட்டிற்கும் உதவிகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமையும் பொறுப்பும். அதேவேளை தங்கள் பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் மேம்பாட்டிற்கும் தங்களுடைய அரசிடமிருந்து நன்மைகளை பெற்றுக்கொள்வது மக்களின் உரிமை இது அடிமைத்தனமோ துரோகமோ சலுகையோ அல்ல.
ஆனால் தழிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதனை அடிமைத்தனம் துரோகம் எனக் கூறி மக்களாகிய உங்களுக்கு கிடைக்கின்ற நன்மைகளை தடுத்து மக்களை தொடர்ந்தும் அவலத்திற்குள் வைத்து அரசியல் நடத்துகின்றார்கள்.
மக்கள் அரசிடம் பெறும் நன்மைகளை அடிமைத்தனம் எனக் கூறி தடுக்கும் இவர்கள் முதலில் தாங்கள் முன்மாதிரியாக நடந்து கொள்ளவேண்டும். இன்று அரசு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென நிறைய வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. சம்பளம் எரிபொருள் ஊழியர்கள் இவற்றை விட கோடிக்கணக்கான பெறுமதியுள்ள வாகன வசதிகள் என பல்வேறு வசதிவாய்ப்புக்களை வழங்குகின்றது. இதனையெல்லாம் தவறாது பெற்றுக்கொள்ளும் தழிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாதிக்கப்பட்டுள்ள மக்களாகிய நீங்கள் பெறுகின்ற போது மட்டும் துரோகம் அடிமைத்தனம் என கூறி தடுப்பது எந்த வகையில் நியாயம்? மக்களுக்கு கிடைக்கின்ற உதவிகளை தடுக்கின்ற இவர்களால் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் ஏதேனும் செய்ய முடியுமா? இவர்களாலும் முடியாது வழங்குகின்றவர்களையும் வழங்க விடமாட்டார்கள் காரணம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடும் அதனால் தங்களின் அரசியலும் தீர்ந்து விடும் என்கின்ற அச்சம் எனவே மக்கள் இவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந் நிகழ்வில் முன்னுரிமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 87 மாணவர்களுக்கு ஒவ்வொன்றும் 11000 ஆயிரம் ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் ஈ.பி.டி.பி. பிரதேச வேட்பாளர்களான மலர்வண்ணன் இராசதுரை மார்கண்டு யதுர்சன் ரூபகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை: