திங்கள், 18 ஜூலை, 2011

அண்ணன் – தம்பிகள் சகோதரங்கள் அடிபட்டுக்கொள்வோம் நீங்கள் எங்கட நாட்டை விட்டு வெளியேறுங்கோ

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை ‘ தம்பி’ என செல்லமாக விளித்துள்ளார் சிறிலங்காவின் மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சரான ராஜித சேனரட்ன.
கடந்த சனிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற யாழ். மாவட்டக் கடற்றொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு விளித்துள்ளார்.
« அன்று 1988ம் ஆண்டு       நான் யாழ்ப்பாணம் வந்த போது தம்பி பிரபாகரனுடன் இருந்த தோழர் பாலகுமார் (தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரமுகர்) அவர்கள் என்னைக் கட்டித் தழுவி முத்தமிட்டு வரவேற்றார். » என உரையில் குறிப்பிட்டார் அமைச்சர் ராஜித சேனரட்ன.

நமது  பார்வையில்…
இந்த செய்தியை  எல்லா புலியாதரவு  இணையங்களும்  எதோ பெரிய செய்தி மாதிரி  பிரசுரித்திருக்கின்றார்கள்.  அப்படி இதில் என்ன புதுமையிருக்கு என்று தெரியவில்லை. இந்திய அமைதிப்படை வந்தபொழுது  பிரபாகரனும்  – பிரேமதாசாவும் அண்ண தம்பி  உறவுதானேகொண்டாடினவர்கள்  அப்பகொண்டாடிய  உறவைதான்  அமைச்சர் ராஜித சேனரட்ன. சொல்லியிருக்கிறார்  .
பிரேமதாச காலத்தில்    நாங்கள்  அண்ணன் – தம்பிகள்  சகோதரங்கள்  அடிபட்டுக்கொள்வோம்  பிறகு   சண்டை பிடிப்போம்   நீங்கள்  எங்கட  நாட்டை விட்டு வெளியேறுங்கோ  என்று சொல்லி இந்திய அமைதிப்படையை அடித்து கலைத்தவர்கள்.  1988   ஆண்டு  நடந்த கதையை தான்   ராஜித சேனரட்ன  இப்பொழுது சொல்லியிருக்கிறார்.  அந்தநேரம்  பிரபாகரன் தம்பிதானே.
இப்ப கடைசியாக மகிந்தவை கொண்டு வந்து சேர்த்ததும் தம்பி பிரபாகரன் தானே.  ரணிலோடு கூட்டுச்சேர்ந்து   புலிகள்  யாழ்பாணத்தில  போய் எத்தனையோ  பேரை எண்கவுண்டரில் போட்டு  தள்ளிவர்கள்.  பிறகு ஈ.பி.டியினரும் புலிகளை  போட்டு தள்ளினவர்கள்.  மாறி  மாறி தமிழர்களை  தமிழர்களேதான்   போட்டுத் தள்ளியது .   சிங்களவன்  நல்லா தமிழனை ஏமாற்றியிருக்கிறான்
ஏன், அண்ணை என்று வாய் கிழிய  சொன்ன பாலா அண்ணையை  கடசிநேரம் பிரபாகரன் போட்டு தள்ளதான்  இருந்தவர். ஆனால் கடைசி நேரம் வன்னிப்  பக்கத்தாலு  போகாமல் லண்டனில் இருந்தபடியால்  தப்பிவிட்டார்.    கலைஞர் கருணாநிதியையும்  போட்டு தள்ளியிருபாங்கள்  நல்லகாலம் பிரபாகரன்  வன்னியை  விட்டு போகாதபடி  சிறிலங்கா    இராணுவம்  தடுத்துப்போட்டார்கள.
வெளிநாடுகளில் இயங்கும் புலி ஊடகங்களுக்கு வரலாறும் தெரியாது. ஒரு மண்ணும் தெரியாது.  கிட்டுவுக்கு கில்ரன்  கொட்டலில வைத்து  கல்யாணம் நடத்தி வைத்ததே சிங்களவன்தான்.
சிங்களவன் தமிழனை  மாத்தையா என்று மரியாதை கொடுத்து  தான் கதைப்பான். தமிழன் தமிழனையே வாடாபோடா என்றுதான் கூப்பிடுகிறான்.  இந்திய தமிழனோ  அதைவி படுமோசமாக  கதைக்கிறான்.

கருத்துகள் இல்லை: