திங்கள், 9 ஆகஸ்ட், 2010

தேரில் வலம் வரும் மாவிட்டபுரம் கந்தன்

வரலாற்றுப் புகழ்மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று முற்பகல் இடம்பெற்றது. காலையில் இடம்பெற்ற வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து சுவாமி தேரில் ஏறி வீதி உலா வந்தார். இன்றைய திருவிழாவில் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அடியார்கள் கலந்து கொண்டார்கள்.

பொது மக்களின் நன்மை கருதி காலை முதல் யாழ்ப்பாணம் பஸ் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் மாவிட்டபுரம் ஆலயம்வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டதுடன்
தனியார் மினி பஸ் சேவைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. (படங்கள் :- நவம்)

கருத்துகள் இல்லை: