இலங்கையில் இருந்து 500க்கும் அதிகமான அகதிகள் கனடாவின் வன்குவார் நோக்கி வந்துள்ள நிலையில் கனேடிய விக்டோரிய மாநிலத்தின் பொது மக்கள் ஆத்திரமடைந்துள்ளதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கெயித் மார்ட்டின் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பல்வேறு முறைப்பாட்டு தொலைபேசி அழைப்புகள் தமக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அதிக அளவிலான தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது காரியாலய தொலைபேசிகளை குரல் பதிவு (வொய்ஸ் மெயில்) முறையில் செயற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் கனடாவுக்கு வருவதையிட்டு விக்டோரியா மாநில மக்கள் விருப்பம் கொள்ளவில்லை எனவும், ஏற்கனவே சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் தமிழர்களுக்கு அரசாங்கத்தினால் பொது சேவைகள் வழங்கப்படுவது தமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என விக்டோரிய மாநில மக்கள் கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில் முன்னர் 200 அகிதிகள் என கூறப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை தற்போது 500 என்பதை ஒட்டாவா நிர்வாகம் உறுதி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பாரிய எண்ணிக்கையிலான மக்கள் தொடர்பில் ஒரேடியாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் அவர்களில் பலரை வந்தவழியிலேயே திருப்பு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக