திங்கள், 9 ஆகஸ்ட், 2010

கிளிநொச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட 1750 முஸ்லிம் குடும்பங்கள் நிலங்கள புலிகளினால் அபகரிக்கபடுள்ளது.


கிளிநொச்சி முஸ்லிம்கள் புலிகளினால் வெளியேற்றப்பட்டு இன்னும் புத்தள நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். கிளிநொச்சி முஸ்லிம்களுடைய காணிகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்களின் காணிகள் முன்னாள் புலிகளினால் ஆகிரமிக்கபடுள்ளது. இவற்றை பெற்று கொடுக்க பொலிசாரும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரமான ஹகீம் பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார்கிளிநொச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட 1750 முஸ்லிம் குடும்பங்கள் புத்தளத்தில் அமைத்துள்ள நலன்புரி முகாம்களில் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழ்ந்து வந்த நாச்சிக்குடா பிரதேசம் மற்றவர்களினால் ஆக்கிரமிக்கபடுள்ளது. இதனால் இவர்கள் தமது சொந்த இடத்துக்கு மீள சென்று மீள்குடியேற முடியதுள்ளது, பறிபோன அவர்களின் இடங்களை மீள பெற்றுகொடுக்க அரசாங்கம் எந்த நடவடி கைகளையும் எடுக்க வில்லை. இவர்களின் பெருமளவு நிலங்கள் முன்னாள் புலிகளினால் அபகரிக்கபடுள்ளது. அவர்கள் தற்போது அந்த பகுதியில் வசித்து வருகின்றனர். விரிவாக இவர்களுக்கு எதிராக பாதிக்கபட்ட மக்கள் குரல் கொடுக்க தயங்குகின்றனர். இவர்களினால் தமக்கு ஏதும் பாதிப்புகள் ஏற்படும் என்று அஞ்சுகின்றனர். ஏனெனில் அவர்கள் தமது ஆயுதங்கள் எங்கேயாவது மறைத்து வைத்திருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: