இதற்கு முன் பல்வேறு குற்ற வழக்குகளில் போலீசாரிடம் பிடிபடாமல் தப்பிய ஜலீலை, கற்பழிப்பு சம்பவத்தில் தப்பக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக செயல்பட்ட போலீசார் , ராமேஸ்வரம் டி.ஸ்.பி., கமலாபாய்க்கே தெரியாமல், இந்த "ஆபரேசனை' முடித்துள்ளனர். வழக்கமாக குற்றச்சம்பவங்களில் ஜலீல் ஈடுபட்ட போதெல்லாம் அவரை தப்பவைக்க ,ராமேஸ்வரம் டி.எஸ்.பி., உறுதுணையாக இருந்துள்ளதாக, ஏற்கனவே உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் புகார் உள்ளது. ஜலீலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் எதிர் கட்சியினர் பல்வேறு சம்பவங்களில், புகார் செய்வது, ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்நிலையில், கும்பலால் நிர்வாணப்படம் எடுத்து மிரட்டி, கற்பழிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட யாஷ்மின்பானு, தகுந்த ஆதாரங்களுடன் ராமநாதபுரம் எஸ்.பி.,பிரதீப்குமாரிடம் புகார் கொடுக்கவே, இவரது புகாரின் படி நடவடிக்கை எடுக்க ராமேஸ்வரம் இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்டார். "கேங் ரேப்பில்' ஈடுபட்டவர்களை கைது செய்யும் வரை, வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்றும், முக்கியமாக ராமேஸ்வரம் டி.எஸ்.பி., க்கு தெரியக்கூடாது என்ற உத்தரவும் மேலிடத்தில் இருந்து வந்துள்ளது.
இதனிடையே ஜலீலை கைது செய்ய தமிழக முதல்வரிடமும் அனுமதி கேட்கப்பட்டு, "கிரீன் சிக்னல்' கிடைத்தவுடன்தான் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம்,சேசு ஆகியோர் நள்ளிரவு 11 மணிக்கு ஜலீல் உள்ளிட்டஆறு பேரை கைது செய்துள்ளனர். மறுநாள் காலை ஐந்து மணிக்குத்தான் டி.எஸ்.பி.,உள்ளிட்ட சக போலீசாருக்கு இது தெரியவந்துள்ளது. செய்வதறியாது திகைத்த தி.மு.க.,பிரமுகர்களும் அமைச்சர், எம்.பி.,என பலதரப்பினரின் சிபாரிசையும் எதிர்பார்த்தனர். ஆனால், அது நடக்காது என தெரிந்தபின், சிறைக்கு செல்வதையாவது தள்ளிப்போடுவோம் என இரண்டு நாட்களாக மருத்துவமனையில் நாட்களை கடத்திவருகின்றனர். சில நாட்களுக்கு முன் நடந்த "ஹம்லா ஆபரேசனில்' கோட்டைவிட்டதில் துவண்டுபோன ராமேஸ்வரம் போலீசாரோ, நகராட்சி தலைவர் ஆபரேசனை(கைது) சாதித்துவிட்டோம் என்ற சந்தோஷத்தில் உள்ளனர்.
palraj - rameshwaram,இந்தியா
2010-08-09 08:34:07 IST
யாருமே ஆதரவு இல்லாமல் அதிகாரம் செய்ய முடியாது. தவறு யார் செய்தது நினைத்துப்பாருங்கள். மக்களே ஓட்டுபோடும் பொது மனசாட்சியாக செய்யணும். யாருக்கும் பயப்பட வேண்டாம் கடுஒழுக்கு மட்டும் பயந்தால் போதும்,...
kalai - nj,இந்தியா
2010-08-09 08:28:56 IST
மிகவும் நன்றி ,இந்த கைதுக்கு செயல் பட்ட அணைத்து காவல் அதிகாரிங்க காலை தொட்டு வணங்குகிறேன் ,இந்த நேர்மையான போலீசார் நீண்ட நாள் சந்தொசாமாக கடவுளிடம் வேண்டுகிறேன் .இது மாதிரி தமிழ்நாடு பூரா நடக்கணும்...
Chandrasekaran - Chennai,இந்தியா
2010-08-09 08:28:04 IST
டி எஸ் பி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள். இது போன்ற குற்றவாளிகள் காப்பாற்றப்படுவது ஏன்? இவர்கள் வீட்டு பெண்களை rape செய்தால் இவர்கள் விட்டுவிடுவார்களா?...
Sankaran - Chennai,இந்தியா
2010-08-09 08:25:51 IST
கற்பழிப்பில் ஈடுபட்ட நகராட்சி தலைவரை கைது செய்ய முதல்வரின் அனுமதி வேண்டும் என்று எந்த சட்டத்தில் ஐயா இருக்கிறது? இப்படியே போனால் யார் கற்பழிக்கலாம் யார் கூடாது என்பதை முதல்வர் முடிவு செய்வார் என்று சொல்வார்கள் போலிருக்கிறது. நாமெல்லாம் அடிமைகளாக இருக்கத்தான் லாயக்கு, ஆங்கிலேயரிடமோ இல்லை நம்மவர்கலிடமேயோ!...
வ .NATHAN - singapore,இந்தியா
2010-08-09 08:19:12 IST
கண்ணகிக்கு சிலை வைக்க போராடிய கட்சியின் நிர்வாகியா ! கும்பலாக பெண்ணின் கற்பை சூறையாடுவது. இதுவும் ஈரோடு ராஜா கதை போல் ஆகுமா ?...
mathiraja - mandapam,இந்தியா
2010-08-09 08:03:02 IST
நகராட்சி தலைவர் மட்டும் மல்ல டி.எஸ்.பி .கும் அப்பு வைத்திருக்க வேண்டும் ....
C Suresh - Charlotte,உஸ்பெகிஸ்தான்
2010-08-09 08:02:29 IST
போலீஸ் மொத்தமாக கெட்டது கிடயாது என்பதற்கு அற்புதமான எடுத்துக்காட்டு. முதல்வர் நேராக போலீஸ் கம்ப்லைன்ட்சே வாங்கி ரகசிய போலிசே விட்டு விசாரிக்க சொல்லி கலஎடுதாள், போலீஸ் departmentayay கிளீன் பண்ணிடலாம்....
Md - India,இந்தியா
2010-08-09 08:01:24 IST
where is law and order if police needs CM's signal to arrest a criminal? How can we say that Tamilnadu is a heaven of peace?...
mathiraja - mandapam,இந்தியா
2010-08-09 07:59:59 IST
இது போன்ற செயலல்களில் நிறைய அரசில்வதிகள் ஈடு படுகின்றனர் அவர்களும் கைதுசெய்ய பட வேண்டும் நன்றி mr .பிரதீப் குமார் சார் ....
அப்துல் பரமக்குடி - பரமக்குடி,இந்தியா
2010-08-09 07:50:02 IST
ஜலீல் போன்ற அயோக்கியர்கள் திமுகவின் வாரிசுகள் எனலாம். இஸ்லாம் மதத்தில் இருக்க இவர்களுக்கு தகுதியில்லை. பாதிக்கப்பட்டது இஸ்லாமிய பெண் என்பதற்காக நான் கூறவில்லை. அது இந்து பெண்ணாக இருந்தாலும் கிறித்துவ பெண்ணாக இருந்தாலும் இந்த திமுக ரவுடிகளுக்கு உரிய தண்டனை கிடைத்தாக வேண்டும். தமிழகத்தில் மத,சாதி பூசல்கள் ஜெயலலிதாவின் ஆட்சியில் இல்லை. ராமதாஸ் போன்றோர் அடக்கி வாசித்தனர் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.பெண்கள் பாதுகாப்பு சிறப்பாகவே இருந்தது. மத்தியில் ஆட்சியை முடிவு செய்தது வேறு சூழ்நிலைகளுக்காக. மாநிலத்திற்கு ஏற்ற ஆட்சியை முடிவு செய்யும் நேரம் வந்துவிட்டது என்றே நினைக்கிறன். மரியாதைக்குரிய அய்யா எம்மதமும் போற்றும் கலாம் அவர்களை மீண்டும் ஜனாதிபதி ஆகவிடாமல் தடுத்த தமிழ் துரோகிகளை யாவரும் அறிவர். எதிரியை நம்பலாம். துரோகிகளை நம்பகூடாது என்பது சான்றோர் கூற்று....
INDRAJIT - Benares,இந்தியா
2010-08-09 07:46:44 IST
அதெல்லாம் சரித்தான் நிருபரே ! இப்போது " ராமேஸ்வரம் DSP கமலாபாய் " மீது என்ன நடவடிக்கை ஆபரேஷன் ? அதுதானே முக்கியச் செய்தி ஆகிவிட்டது இப்போது ?...
Vadivelu - Fahaheel,குவைத்
2010-08-09 07:46:22 IST
குட், தொடர் நடவடிக்கை எடுத்து ,குற்றவாளி தண்டனை பெற வேண்டும்....
கிருஷ்ணன் - chennai.,இந்தியா
2010-08-09 07:44:53 IST
தினமலர் நாளுக்குநாள் மெருகேறிவருகிறது. ஒரு முக்கிய விஷயம். அரசினரிடம் புகார் தெரிவித்தல் அவர்கள் கவனிப்பதில்லை . ஆனால் தினமலரில் வந்தால் உடனடியாக முடித்து விடுகின்றனர். எங்கள் முகபெயர் மேற்கு பேருந்து நிலையம் மிகவும் மோசமாக உள்ளது. குண்டும் குழியும் ஆக உள்ளது. மழை காலம் வந்தால் சேரும் சகதியும். மக்கள் மிகவும் கஷ்டபடுகின்றனர். தினமலரில் தயவு செய்து இதை பற்றி எழுதுங்கள் . உடனடியாக நிவாரணம் கிடைக்கும் ....
ராம் - Virginia,யூ.எஸ்.ஏ
2010-08-09 07:40:09 IST
சட்டம் ஒழுங்கிற்க்கு இதை விட கேவலம் இருக்க முடியாது. குற்றவாளி ஆளுங்கட்சி உறுப்பினர் என்றால் காவல் துறை முதல்வரின் க்ரீன் சிக்னலுக்கு பொறுத்திருக்க வேண்டுமா ? அதை விட மகா கேவலம் அத்துறையின் டி.எஸ்.பி யை புறக்கணித்தது. பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.......
பிரபாகர் - chennai,இந்தியா
2010-08-09 07:39:11 IST
Congrats to the police department....
குப்பன் - Kovai,இந்தியா
2010-08-09 07:32:36 IST
இதை படிப்பதற்கே மிகவும் அவமானமாக உள்ளது. இவ்வாறான கீல்தரப்பட்ட கற்பழிப்பு ரவுடிகளை முதல்வரின் ஒப்புதலுக்கு பின்பே கைது செய்ய முடியும் என்றால் மற்ற கேசுகலேல்லாம் எம்மாத்திரம்....
ச.Ramamurthi - Sholingur,இந்தியா
2010-08-09 07:03:03 IST
it is a pity that politicians indulge in such henios crime and the top cops help them to escape from law. It is really a great relief that there are few honest officers are there in the currupt police department.After the dravidian parties came to poswer there is systematic degradation in every branch of the administration. Political patranage,and interference in daytoday work has brought incalculable harm to the administration.God alone can save tamilnadu, if people do not vote for the right candidate without accepting money from the political parties....
ganesh - chennai,இந்தியா
2010-08-09 06:59:07 IST
இதுதான் இன்றைய திமுக ஆட்சியின் லட்சணம் ......
கணேஷ் - india,இந்தியா
2010-08-09 06:33:11 IST
தினமலர் உண்மையிலே.. உண்மையை சுட்டிகாட்டுவதில் நம்பர் ஒன். Keep it up. முதல்வரின் செவிக்கு இப்போதுதான் எட்டியதா? அப்படிஎன்றால்.. தெரிந்துருந்தும் பேசாமல்.. இருந்தது மிகவும் கண்டிக்கத்தக்கது? போதுமையா உன் ஆட்சி... லஞ்சம், கற்பழிப்பு, திருட்டு, மின் வெட்டு, விலைவாசி ஏற்றம், கொள்ளை, குடும்ப அரசியல், இலங்கை தமிழன் பிரச்னையில் நடத்திய நாடகம், spectrum scandal , etc சொல்லி கொண்டே போகலாம்... இந்த பக்கம் பத்தாது..... ஒரு வேதனைக்கு உண்டான விஷயம் என்றால், பல்கலை கழகம் துணை வேந்தர் , விரிவுரையாளர் பதவிக்கு லஞ்சம் ... என்ன கொடுமை இது .. கல்வியில் லஞ்சம் என்றால் இதை விட கேவலம் இருக்க முடியாது.. இளங்கோவன் நன்றாக சுட்டிக்காட்டினார்....
எஸ் குப்புசாமி - சென்னை,இந்தியா
2010-08-09 06:31:03 IST
அந்த டி எஸ் பி க்கு தண்டனை கிடையாதா?...
ஐயப்பன் - nagercoil,இந்தியா
2010-08-09 06:24:57 IST
இதுவரை தண்டனையில் தப்பித்த இவர்களையும் ,துணை நிற்கும் கழக ,காவல் -களையும் தாண்டி கைது செய்தது முக்கியமல்ல.ஆதாரத்துடன் பாதிக்கப்பட்டவர் நிரூபித்தால் மட்டுமே நடவடிக்கை ,யாருடைய சிபாரிசும் இனி எங்களுக்கு தேவையில்லை என்ற உறுதியில் நமது காவல் துறை தைரியமாக ,தலைநிமிர்ந்து ,கண்ணியமாக அனைத்து குற்றங்களிலும் நேர்மையான முறையில் தண்டனை பெற்று தர வேண்டும்.....
ரங்கராஜ் - losanglesusa,இந்தியா
2010-08-09 06:18:14 IST
ஒரு நகரத்தின் உயர்ந்த பதவிக்கு நிருத்துபவரை பற்றி கட்சிக்கு எதுவுமே தெரியாதா ?தலைவருக்கு ரகசிய போலிஸ் தகவல் கொடுப்பதெல்லாம் சினிமாவில் மட்டும் தானா?ஏற்கெனவே ஏகப்பட்டகேசுகள் வேறு;;ராமேஸ்வரம் மக்கள் எத்தகைய புத்திசாலிகள் ?டி எஸ் பி. அவரின் கைத்தடி என்பது இன்னும் கொடுமை;;;அது சரி .;சென்னை மாநகரத்திலேயே போலிஸ் ஸ்டேசன் அமைத்து நீதி மன்றமும் வைத்து போலிஸ்,நீதிபதிகளையும் நியமித்து அடேங்கப்பா!தலை நகர போலிஸ் எப்படி சுறுசுறுப்பாக செயல் படுகிறார்கள்;;;அரசு விழித்தல் அவசியம். ஜெயா கேசுக்காக போராட்டம் என்பதை விட இதுபோன்ற செயல் கலீல் கவனம் தேவை என்பதை எப்போது உணர் வார்களோ ?...
ganesan - Singapore,இந்தியா
2010-08-09 06:17:44 IST
அடுத்த தேர்தல் முடிந்ததும் நகராட்சி தலைவருக்கு டில்லியில் மந்திரி பதவியும் மற்றவர்களுக்கு சிங்கார சென்னையில் மந்திரி பதவியும் சிபாரிசு செய்யப்பட்டால் அது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் அல்ல !!!!!!!!!!!!!!!!!!!!!!!...
ஷங்கர் .G - singapore,ஸ்லேவாக்கியா
2010-08-09 05:54:10 IST
good job tamil nadu police . well done . keep it up ....
கெர்ஷோம் செல்லையா - CHENNAI,இந்தியா
2010-08-09 05:42:53 IST
காவல் துறையினர் ஒரு நகைச்சுவை சொல்வார்கள். WE HAVE LAW, BUT NO ORDER! இதுதான் இங்கும் நடந்துள்ளது. குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க சட்டம் உண்டு, ஆனால் ஆணையில்லையே! ஒவ்வொரு முறையும் அமைச்சர் -முதலமைச்சர்- மேலிடம்-நீதி மன்றம்- என்று மேலிலிருந்து ஆணை வந்தால்தான் உண்மையான பணி நடக்கும் என்றால், நமது ஆட்சிமுறையின் அடித்தளத்தில் பெரியதோர் ஓட்டை இருக்கிறது என்றுதானே பொருள்! தன் கடமையைத் தவறாமல் செய்வதற்குத்தான் மாதச்சம்பளம் என்ற நல்லெண்ணம் நமது நாட்டில் எப்போது வரும்? நீதியாய்க் கடமை செய்பவர்களை மதித்து, ஆதரித்து, அவர்கள் வழியாய் அரசிற்கு நற்பெயர் பெறுவதுதான் நல்ல அரசின் அடையாளம் என்று நமது தலைவர்கள்-ஆட்சியாளர்கள் எப்போது கற்பார்கள்? ஆறாவது வகுப்பு மட்டும் பள்ளியில் கற்று, அதன்பிறகு தானே கற்றறிந்து நல்லாட்சி வழங்கிய காமராஜர் எப்படியெல்லாம் செயல்பட்டார் என்று தமிழகத் தலைவர்கள்- தலைவிகளுடன் தமிழன் கற்றால், தமிழகம் செழிக்கும்- தமிழனும் உயர்வான்!...
பாபு வெங்கடராமன் - Chennai,இந்தியா
2010-08-09 05:42:50 IST
பாதிக்கப்பட்ட பெண் தகுந்த ஆதாரங்களைக் காண்பித்துப், புகார் மனு கொடுத்த பின்னும் எதற்காக தமிழக முதல்வரின் "சிக்னலுக்காக" காத்திருக்க வேண்டும்? தமிழா போலீசார் முதலில் ஆளும் கட்சிக்கும், அரசியல் வாதிகளுக்கும் ஆதரவு தருவதை நிறுத்திவிட்டு பொதுமக்களுக்கு உண்மையாக நடக்கவேண்டும். அப்பொழுதுதான் "காவல்துறை உங்கள் நண்பன்" என்ற வாசகம் மெய்ப்படும்....
KIm - korea,இந்தியா
2010-08-09 05:17:32 IST
இவனெல்லாம் ஒரு நகராட்சி தலைவன் எப்படி மக்கள் தேர்ந்து எடுத்தார்கள் இந்த மிருகத்தை !! போலிஸ் போலிஸ் !!...
காவல்காரன் - udumalai,இந்தியா
2010-08-09 04:40:11 IST
ஒரு பெண்ணைக் கூட்டாகக் கட்பழித்தவர்களைக் கைதுசெய்ய இவ்வளவு தடைகளைத் தாண்டவேண்டி இருக்கிறது! அந்தக் கிரிமினல்களுக்கு ஆதரவழித்துக் காப்பாற்றி வந்தவர் ஒரு போலீஸ் அதிகாரி! அவரை இவ்வளவு உறுதியாகத் தெரிந்தபின்னும் இன்னும் பணியில் வைத்துள்ளனர். அவருக்குத் தெரியாமல் தந்திரமாகப் பிடித்துள்ளனர்.தெரிந்திருந்தால் வேறுவிதமாக இருந்திருக்கும்! அதுவும் முதல்வரின் கடைக்கண் பார்வை இல்லாதிருந்தால் இது சாத்தியமில்லை! ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அவலத்துக்கு நியாயமான நடவடிக்கை எடுக்க இவ்வளவும் வேண்டுமென்றால் அது அந்தக் கிரிமினல்களின் செயலைவிட மோசமானது! அவர்கள் ஒரு பெண்ணைச் செய்ததை இவர்கள் சட்டத்தைச் செய்திருக்கிறார்கள். நீதி இவர்களை நெருங்கவாவது விடுவார்களா? நமது சட்டங்கள் எப்போது குற்றங்களை உருவாகாமல் தடுக்கும்?...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக