கேரள சுதந்திரப் போராட்ட வீரரும் மலையாளத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவருமான வைக்கம் முகமது பஷீரின் கதையை அடிப்படையாக வைத்து முன்பு அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய படம் மதிலுகள். மம்முட்டி நடித்த இந்தப் படம் அவருக்கு தேசிய விருதினைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் பெண் கதாபாத்திரங்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 'மதிலுகளுக்குப்புறம்' என்ற பெயரில் உருவாகிறது. ஆனால் இதனை அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கவில்லை. புதுமுக இயக்குநர் பிரசாத் இயக்குகிறார்.
ஆண்கள் சிறையில் இருக்கும் பஷீருக்கு பெண்கள் சிறையில் இருக்கும் நாராயணிக்குமான நட்பின் அடிப்படையில் இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இரண்டு சிறைகளுக்கும் இடையில் பெரிய மதில் சுவர் இருப்பதால் ஒருவரையொருவர் சந்தித்துப் பேச முடியாது. இதனால் பஷீரால், நாராயணியை பார்க்க முடியாது. குரலை மட்டும்தான் கேட்க முடியும். மற்ற அரசியல் கைதிகளின் விடுதலைக்குப் பின் தனிமையில் இருக்கும் பஷீருக்கு நாராயணியின் குரல் ஆறுதலாக இருக்கும். சிறையில் இருந்து விடுதலை பெற்ற பின்னும்கூட நாராயணியை பார்க்காமலேயே சென்று விடுவார் பஷீர்... என்று போகிறது கதை.
இதில் பஷீராக மம்முட்டியும், நாராயணியாக நயன்தாராவும் நடிக்கின்றனர். மம்முட்டியின் சொந்தப் பட நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக