வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

காதல் சொல்ல வந்தேன்' படத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பூபதி பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காதல் சொல்ல வந்தேன்' படத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புதுமுக நாயகன் பாலாஜி, மேக்னா சுந்தர் ஜோடியாக நடித்த 'காதல் சொல்ல வந்தேன்' படம் நாளை ரிலீசாகிறது. பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார்.இப்படத்துக்கு தடை விதிக்க கோரி சமர்த் கிரியேஷன்ஸ் பட நிறுவன உரிமையாளர் கோபி சாஸ்திரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது மனுவில் அவர் கூறியுள்ளதாவது:2005-ம் ஆண்டு இயக்குனர் பூபதி பாண்டியன் 'நானும் என் சந்தியாவும்' என்ற படத்தை இயக்கித் தருவதாக என்னிடம் ஒப்பந்தம் போட்டார்.

மூன்று மாதத்தில் அப்படத்தை எடுத்து தருவதாக ஒப்பந்தத்தில் உறுதி அளித்தார். இதற்காக அவருக்கு ரூ. 99 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்தேன். ஆனால் அவர் குறிப்பிட்ட காலத்தில் எடுத்து தர வில்லை. அதன்பிறகு 'திருவிளையாடல் ஆரம்பம்', 'மலைக்கோட்டை' போன்ற படங்களை இயக்கி முடித்தார்.'நானும் என் சந்தியாவும்' படத்தை எடுக்கும்படி தொடர்ந்து வற்புறுத்தினேன். அதற்கு அவர் ஒப்பந்தத்தில் சொன்னபடி ரூ. 99 லட்சம் பட்ஜெட்டில் படம் எடுக்க முடியாது. ரூ. 5 1/2 கோடி செலவாகும் என்றார்.

தற்போது 'காதல் சொல்ல வந்தேன்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் நாளை ரிலீசாக உள்ளது. என்னிடம் ஒப்பந்த போட்ட நானும் என் சந்தியாவும் படத்தின் கதையைத்தான் 'காதல் சொல்ல வந்தேன்' என்ற பெயரில் எடுத்துள்ளார். இனிமேல் அவரால் எனக்கு படம் இயக்கித்தர முடியாது. எனக்கு பூபதிபாண்டியன் ரூ.23 லட்சம் நஷ்டஈடு தர கோர்ட்டு உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் காதல் சொல்ல வந்தேன் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும்..."இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.இந்த வழக்கு நீதிபதி பெரியகருப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பூபதி பாண்டியனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: