முக்கியமான விடயங்கள் குறித்து பாலசிங்கத்துடன் பேச்சுகளை மேற்கொள்ள நாங்கள் முயன்றபோது நீங்கள் என்னை மிகவும் நெருக்கடியான நிலைக்குக் கொண்டு செல்கிறீர்கள் என்று பாலசிங்கம் கூறியதாகவும் நான் இதனை ஆராய்ந்தால் நீங்கள் இதனைச் செய்கின்றீர்கள்… (கழுத்தை வெட்டுவதற்கான சமிக்ஞை) அவர் (பாலசிங்கம்) தனது கழுத்து வெட்டப்படாமல் இருப்பதைத் தவிர்த்துக்கொள்ள முயற்சித்தார் என்றும் குணதிலக குறிப்பிட்டுள்ளார்.
யுத்த நிறுத்த உடன்படிக்கையைப் பயன்படுத்தி கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்ள புலிகள் விரும்பியதாகத் தென்பட்டதாக குணதிலக கூறினார். அதாவது செப்டெம்பர் 11 இற்குப் பின்னர் அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத தன்மை காணப்பட்டது. அதிலிருந்தும் அவர்கள் காலத்தைக் கடத்த விரும்பினார்கள். அதேசமயம், அச்சமயம் பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவும் சமாதானத்தின் மூலம் புலிகளைப் பலவீனமடையச் செய்வதற்கு கால அவகாசத்தைப் பெற்றுக்கொண்டதாக பேர்னாட் குணதிலக தெரிவித்தார்.
« புலிகளுடன் முரண்படக்கூடாதென்ற தீர்மானம் இருந்தது. ஏனென்றால் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் அவர்களை நீண்டகாலத்திற்கு வைத்திருந்தால் அவர்களின் அத்திவாரத்தைப் பலவீனமாக்க முடியுமென்பதால் அவர்களுடன் முரண்படாமலிருப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. புலிகளை விடுமுறையில் செல்வதற்கு அனுமதித்தல், தமது பெற்றோரைச் சந்திப்பதற்கும் பெண் சிநேகிதிகள், ஆண் சிநேகிதர்களை வைத்திருப்பதற்கும் திருமணம் செய்வதற்கும் அனுமதிப்பதன் மூலம் அவர்களுடைய வலுவான அத்திவாரம் பலவீனமடைந்தது.
விடுதலைப்புலிகள் முதல் நாளிலேயே யுத்த நிறுத்தத்தை மீறியிருந்தார்கள். அரசாங்கத்தரப்பிலும் பார்க்க அதிகளவு யுத்த நிறுத்தத்தை மீறியிருந்தனர். இலங்கைக் கண்காணிப்புக்குழு இவை தொடர்பாக பரிசீலிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், (அக்குழுவை) கடிப்பதற்கு அங்கீகாரமில்லாத காவல் நாய் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
விடுதலைப்புலிகள் போர் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு விரும்பியிருந்தார்கள் என்பது தெளிவானதாகும். திருகோணமலையில் தடையை ஏற்படுத்தி யாழ்ப்பாணத்தில் மீள நிலை கொள்வதற்கு முயற்சிக்க விரும்பியிருந்தனர். இறுதியில் அவர்கள் 2005 ஜனாதிபதித் தேர்தலில் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்தார்கள். பதிலாக தந்திரோபாயமான முறையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தனர். அவரை அவர்கள் கடும்போக்காளரென நினைத்திருந்தனர் என்றும் பேர்னாட் குணதிலக குறிப்பிட்டிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக