புலிகள் செய்த காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலைக்கு இரா.சம்பந்தன் பகிரங்க மன்னிபுக் கோரினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் சுமார் 300 இற்கும் அதிகமானோர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் 1990 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இருபது வருடங்களுக்குப் பின் மன்னிப்புக் கோரி உள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோரி உள்ளார்.அவர் இது குறித்து முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:-
”இது ஒரு தவறுதான். 20 வருடத்துக்கு முன் இடம்பெற்ற இத்தவறுக்காக முஸ்லிம் சகோதரகளிடம் மன்னிபுக் கோருகின்றமையில் எமக்கு எவ்விதமான தயக்கமும் இல்லை.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சில நடவடிக்கைகள் விளங்கிக் கொள்ள முடியாதவை.அப்படியான ஒன்றாகத்தான் இப்படுகொலை உள்ளது.”

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக