ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

வறுமையில்லா தமிழகம் ஒரு ரூபாய்க்கு ரேஷன் அரிசி, 50 ரூபாய்க்கு மசாலா பொருட்கள்

சென்னை : வறுமையில்லாத தமிழகத்தை உருக்குவதே தனது அடிப்படை லட்சியம் என தமிழக ‌முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பசி மற்றும் வறுமை ஒழிப்பு சர்வதேச மாநாடு நடந்தது. முதல்வர் கருணாநிதி மாநாட்டை தொடங்கி வைத்து ஆண்டறிக்கை புத்தகத்தை வெளியிட்டார்.
வறுமையில்லா தமிழகம் : விழாவில் முதல்வர் கருணாநிதி : தமிழகத்தை வறுமையில்லாத மாநிலமாக மாற்றுவதை எனது லட்சியமாக கொண்டுள்ளேன். இதற்காகத்தான் குழந்தைகளுக்கு சத்துணவு , ஒரு ரூபாய்க்கு ரேஷன் அரிசி, 50 ரூபாய்க்கு மசாலா பொருட்கள் என கொடுத்து வருகிறது தமிழக அரசு. தமிழகம் ஆதி காலம் முதலே உணவுப்பொருள் உற்பத்தியை பெருக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தற்போதைய பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ற மாதிரி உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்வதற்காக புதிய வேளாண் யுக்திகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கருணாநிதி கூறினார். ஊட்டச்சத்து இல்லாமல் எந்த குழந்தையும், உடல் ரீதியாக, மன ரீதியாக பாதிக்க கூடாது என்பதிலும் உத்தரவாதம் அளிக்க அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் ‌தெரிவித்தார்.
ravi - Riyadh,செனகல் 2010-08-07 20:05:26 IST
தினமலர் பிரசுரிப்பாளர் அய்யா நீங்கள் இன்று தமிழ்நாட்டு மக்கள் செழிப்பாக இருக்குரார்களா என்ற கேள்விக்கு எத்தனை விழுக்காடு வந்து உள்ளது என்பதை காண்பித்தால் போதுமானது.......
saralaayar - Thiruppuvananm,இந்தியா 2010-08-07 20:04:48 IST
தமிழ்நாடு மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பிரெஞ்சு புரட்சி மாதிரி மு.க குடும்பங்கள் வீடுஹளில் புகுந்து இருக்குற சொத்தையெல்லாம் பிடுங்கின தமிழ்நாடு வரோமையே இல்லமே நூறு வருஷத்துக்கு இருக்கும்....
sundaram - Ruwais,யூ.எஸ்.ஏ 2010-08-07 19:47:46 IST
இன்னும் ஒரு பத்து வருஷம், எதுக்கு அஞ்சு வருஷம் போதும், நீர் ஆட்சி செஞ்சீர்னா, சுவிஸ் வங்கிக்கு கடனும் கொடுக்கலாம், அப்படியே தமிழ் நாட்டையும் வாங்கி போட்டுடலாம். அதுக்கப்புறம் நம்ம நாட்டுல வறுமைங்கர வார்த்தைகூட இருக்காது....
Raju - chennai,இந்தியா 2010-08-07 19:44:43 IST
Well said. If you and entire extended family return the money after dedcuting your monthly income , it would be greatly felt by every one. Do you have guts?...
NANA THYAGARAJAN PARASALA - Trivandrum,இந்தியா 2010-08-07 19:44:22 IST
the people in India are cheated with the false promises of various politicians. Atleast, Karunanidhi's statement at this juncture will have a fruitful results in the coming years. Tamil Nadu people have voted him only for this main cause and the TN CM's statement is laudable. I have strong belief in Kalaignar's rule and he would keep up his promises in the near future. Free TV is not enough, but a stomach full meals. I appreciate the CM of Tamil Nadu and thank him....
bala - Palayamkottai,இந்தியா 2010-08-07 19:38:22 IST
அய்யா முத்தமிழ் வித்தவரே!!!! நீங்க வறுமை இல்லாத தமிழகம் அப்படின்னு கனவு காண்கிறீர் ஆனா உங்க அமைச்சர் பொன்முடி விலைவாசி உயரத்தான் செய்யும் அப்படின்னு தெனாவெட்டா பேசீருக்கர்... கேட்டா வருமானம் உயர்ந்து உள்ளதாக சொல்கிறார்.... யாருக்கு ????...
விஜய் - chennai,இந்தியா 2010-08-07 19:24:14 IST
அடுத்து என்ன பேசலாம் என்று ரூம் போட்டு யோசிப்பாங்களோ.நீ இருக்கும் வர எங்கய்யா வறுமை ஒழியபோகுது.நீ வறுமையை அதிகமாகாமல் இருந்தால் போதும்.இதோடு நிர்றுதிகோ....
பட்டினத்தார் - chennai,இந்தியா 2010-08-07 19:23:40 IST
கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக்குண்டரைக் காமுகரைக் கொடும்பாவமே செய்யும் நிர்மூடர்தம்மைக் குவலயத்துள் நெடும்பனைபோல வளர்ந்து நல்லோர் தம்நெறியறியா இடும்பரை என்வகுத்தாய்; இறைவா, கச்சியேகம்பனே....
ஆனந்த் கா.வி. - Mumbai,இந்தியா 2010-08-07 19:19:12 IST
இத்தனை வருசமா வறுமை ஒழிக்காதவரு இனிமேலா ஒழிக்க போறாரு...... இந்த சினிமா டயலாக் எல்லாம் எங்ககிட்ட வேண்டாம்......
கே.விஜயராகவன் - chennai,இந்தியா 2010-08-07 19:17:22 IST
அய்யா புண்ணியவானே, முதலில் தமிழகம் இருக்கிறதா பாருங்கள். உங்கள் இலவச திட்டங்களால் பிச்சைகாரர்களாகவும், தாறுமாறான விலைவாசி ஏற்றத்தால் அன்றாட வாழ்க்கைக்கே ததிங்கினத்தோம் போடுபவர்களாகவும், தினம் ஒரு ரூட் டைவர்சன், போட்ட சாலைகளை பெயர்ப்பது, குண்டும் குழியுமான சாலைகள், குப்பையே வாராத மாநகராட்சி இன்னும் இப்படி எவ்வளவோ இன்னல்களுக்கிடையே நடைபிணங்களாய் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களையும், தமிழத்தையும் முதலில் வாழ விடுங்கள். வறுமையை வளர்த்துக்கொண்டே அதை ஒழிப்பது பற்றி உங்களால் மட்டுமே பேச முடியும். இந்த லட்சணத்தில் அடுத்த தேர்தலிலும் நீங்கள் வெற்றி பெற்று உங்கள் ஆட்சியே வருமென்று ஆருடம் வேறு. நினைக்கவும் நெஞ்சு நடுங்குகிறது.உங்கள் குடும்பம் செழித்த வரையில் போதாதா ?இன்னுமா போதவில்லை? வறுமை இல்லாத தமிழகம் வரும்.எப்போது?இரண்டு கழகங்களும் தமிழ்நாட்டை விட்டு ஒழியும்போது. முதலில் உங்கள் ஆட்சி ஒழியட்டும். அதுவே தமிழகத்தை பிடித்த வறுமை. இதற்கு இறைவன் அருள்வானாக....
maramandai - nz,நைஜர் 2010-08-07 19:11:46 IST
அய்யா அவர்களின் லட்சியம் நிறைவேறினால் மிக்க மகிழ்ச்சி........
கி. வெ. சிவராமன் அய்யர் - mumbai,இந்தியா 2010-08-07 19:04:26 IST
கலைஞர் அய்யா, நீங்கள் எதை வேணுமின்னாலும் சொல்லலாம். உங்களுக்கு பத்திரிகை பலமும் டி.வி. சேனல் பலமும் இருக்கு. கவலையே படாதீங்க. இப்போ உங்கள் காட்டில் மழை தான். பூந்து விளையாடுங்க. தமிழனுக்கு கொவனமேனும் இருக்குமா இல்லே அதையும் உருவிடுவீங்களா ?...
Appan - LondonUK,உருகுவே 2010-08-07 18:53:48 IST
முகா வறுமை இல்லாத தமிழகம் என்பதை விட வறுமை இல்லாத என் குடும்பம், உடன் பிறபுகள் என்று சொல்லலாம். முகா ஆட்சியில் நிறைய நல்லதுகள் செய்து உள்ளார். ஆனால் இந்த இரண்டு செயல்கள் -குடும்ப அரசியல், உடண் பிறப்புகள் செய்யும் அட்டகாசங்கள் இவரை அழித்து விடும். முக இந்த தள்ளாத வயதில் ஏன் இப்படி செய்கிரார்.ஆனப்பட்ட காந்தியே இப்போது மக்கள் மறந்து விட்டார்கள். இவர் இப்படி செய்தால் சரிதிரம் இவரை வில்லனாகத்தான் சொல்லும். பணம் பன்னத்தான் முகா இவ்வளவு செய்கிரரரா ?....
V.Subbarao - Singapore,இந்தியா 2010-08-07 18:44:29 IST
பல ஆண்டுகள் ஆட்சியிலிருண்துகொண்டு டாக்டர் பட்டமும் பெற்று பலமுறை பாராட்டுவிழா ஏற்றுக்கொண்டு வருகிறார் நமது முதல்வர். இவையெல்லாம் எதர்க்காக ? போகும்வழிக்கு புண்ணியம் தேடவா ? மலிவுவிலையில் அரிசியும், இலவச டி வி கொடுத்து பல மக்களை பிச்சைக்காரர்கலாகவும், சோம்பேறிகளாகவும் ஆக்கி, ' டாஸ்மாக்' திறந்து யோசநையற்றவர்கலாக்கி, நிலை மறந்த மாந்தர்களை வளர்த்தது தமிழ்நாட்டிற்கும், தமிழர்க்கு தந்த பிரசாதம் . வருமையில் வளர்ந்து, வளத்தில் கொழிப்பவற்கு எந்த போதிமரம் வெளிச்சத்தி தந்தது. அவர்போல இவரும் யாவையும் துறந்து அலைவரோ !!!...
கே.விஜிகுமார் - villupuram,இந்தியா 2010-08-07 18:35:56 IST
எல்லா தொழில்களையும் நீங்களும் உங்கள் குடும்பமும் தான் செய்யவேண்டும் என்றால் தமிழ்நாட்டில் வறுமை எப்படி நீங்கும்?...
prabhu - chennai,இந்தியா 2010-08-07 18:31:56 IST
கொடிது கொடிது இளமையில் வறுமை;அதனினும் கொடிது, ஒழிக்க முதுமையில் முயலுதல். என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில், ஏன் இந்த வறுமை நம்நாட்டில்? ஒழுங்காய் ஆட்சி செய் தமிழ்நாட்டில்; உயரும் மக்கள் வாழ்வு ஒரு நொடியில்....
சண்முகசுந்தரம் - chennai,இந்தியா 2010-08-07 18:22:46 IST
தமிழகம் என்பது கருணாநிதி பார்வையில் அவரது குடும்பம்...
விட்டோபா - chennai,இந்தியா 2010-08-07 18:18:06 IST
how these tamil nadu people still believe him i donot know. still many supporters says he is doing good! how it is...i know all the government employees and teachers support him. but still they also know that he is cheating people and his family is becoming wealthier day by day...
INDRAJIT - Benares,இந்தியா 2010-08-07 18:15:36 IST
அடேங்கப்பா ! வறுமை இனி இந்தக் கலியுகம் முடியும் வரை எட்டிக் கூடப் பாக்காதே நம்ம பரம்பரையையே ! " வயிறு எரிய, எரிய " வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது " என்று கத்திக் கத்தி .... அடேயப்பா ! அது ஒரு காலம் ! "அதெல்லாம் சரி ! கேட்க நால்லாத்தான் இருக்கு INDRAJIT உடன்பிறப்பே, நீங்க சொல்றது ! ஆனால், என்னமோ சொன்னீங்களே, இந்த வடக்கு - தெற்குன்னு, அப்பிடிச் சொன்னது யாருன்னு மட்டும் சொல்லுங்க ! அந்த டயலாக் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு ! " போச்சுடா ! அடியைப் பிடிடா பாரத பட்டான்னு ' திருக்குவளையிலேர்ந்து ' இல்லே ஆரம்பிக்கோணும் ! நமக்குத் தெம்பு, நேரம், பொறுமை இல்லே ! தெரியாம வந்து மாட்டிக்கிட்டேன் ! ஆளை விடுங்க !...
ரமேஷ் பாபு - ramnad,இந்தியா 2010-08-07 18:07:18 IST
உங்க குடும்பம் இருக்கும் வரையில் தமிழ் நாட்டில் வறுமை இருக்கத்தான் செய்யும்...
சbalaji - chennai,இந்தியா 2010-08-07 17:47:08 IST
first stop giving the free scheme.Make people to work. automatically the poverty will go....
KVS - Puducherry,இந்தியா 2010-08-07 17:27:18 IST
முதல்வரின் குடும்பத்தினர் அனைவவரிடமும் உள்ள மக்கள் பணம் அனைத்தும் தமிழ்நாடு மக்களுக்கு பிரித்து கொடுத்தால் தமிழ்நாடு வருமைஇல்லாத நாடாகிவிடும். இது மக்கள் கருத்து...
இப்ராகிம் - chennai,இந்தியா 2010-08-07 17:26:56 IST
ஆமாம். ஏற்கனவே குடும்பத்தை மட்டும் செழிக்க வைத்து தமிழகத்தை வறுமையில் தள்ளி விட்டார்கள். போதும் உங்கள் ஆட்சி. தமிழக மக்கள் உங்கள் ஆட்சிக்கு டிக்கெட் எடுத்து தயாராக உள்ளார்கள்....
ப நந்தகுமார் - chennai,இந்தியா 2010-08-07 17:07:34 IST
ஒரு ரூபாய்க்கு அரிசியும் ௫௦ ரூபாய்க்கு மசாலாவும் போட்டால் வறுமை ஒழியாது முதல்வரே!, சோம்பேறிகள் தான் உருவாகுவார்கள்.மக்களுக்கு நிரந்தர வருமானத்துக்கு வழி செய்து கொடுங்கள். வறுமை தானாக ஒழியும்....
subramniyam - coimbatore,இந்தியா 2010-08-07 16:51:31 IST
ஐயோ, யப்பா ஆளை விடுங்க நா வரலை இந்த விளையாட்டுக்கு ?! இதே வேலையா போச்சு. இன்னும் தேர்தலே வரலை அதுக்குள்ளே அலம்பலை பாரு,...
ரஹ்மான் - muscat,பாகிஸ்தான் 2010-08-07 16:48:18 IST
தலைவரே வறுமையை ஒழிப்போம் சரி யார் வீட்டுக்குன்னு தெளிவா சொல்லுங்க. உங்கள் வீடு மட்டும் தான் வருமைளிருந்து விலகி இருக்கு....
அப்துல் ரஹீம் - Singapore,ஸ்லேவாக்கியா 2010-08-07 16:42:04 IST
தனது மனைவி, மகன்-மகள்கள், பேரன்-பேத்திகள் , அவர்களின் பிள்ளைகள் ஆகியோரை மட்டும் தமிழகம் என்று நினைத்துக் கொண்டால் எப்படி? -Abdul Rahim, Singapore...
kannan - vellore,இந்தியா 2010-08-07 16:32:27 IST
ஏதாவது ஒரு கூட்டத்தில் ஏதாவது ஒன்னை சொல்ல வேண்டியது அப்பறம் அதை பற்றி நீங்களும் மறந்துடுவீங்க ஹி ஹி ஹி நாங்களும் மறந்த்டுவோம், எதுக்கு ஐயா இப்படி தொல்லை பண்றீங்க? இன்னிக்கு நாங்கதான் கிடைச்சோமா? அம்மா என்ன பண்றங்கன்னு உளவுத்துறையை கேட்டிங்களா?போங்க போயி கடிதாசு எழுதுங்க...
Bala - India,இந்தியா 2010-08-07 16:32:09 IST
இவ்வளவு நாளா வறுமை மற்றும் சோம்பேறித்தனத்தை உருவாக்குவதே லட்சியமாக கொண்டு இலவசத்தை அள்ளி வீசியாச்சு, இனிமே என்னத்த புதுசா உருவாக்குவது? இந்த இலவசங்களை நிறுத்த முடியுமா?...
jagan - Pondicherry,இந்தியா 2010-08-07 16:29:10 IST
வறுமை இல்லாத பரம்பரை உருவாக்குவதே உன் லச்சியம்......
வெ ம வினோத் - Coimbatore,இந்தியா 2010-08-07 16:25:56 IST
மக்களிடம் இவர்களுக்கு காமெடி பண்ணுவதே வேலை. மத்தியில் காங்கிரஸ் மற்றும் தமிழகத்தில் இந்த தி.மு.க எத்தனை முறை ஆண்டுவிட்டார்கள். இத்தனை காலம் இதை செய்ய தோன்றவில்லையா. வறுமையின் அர்த்தம் இவர்களுக்கு எப்படி தெரியும். தேர்தல் வருதுல்ல அதுதான் டயலாக் ஆரம்பிதிருக்கிறார்கள்....
siva - guangzhou,சீனா 2010-08-07 16:17:45 IST
முதல்வர் ஐயா நீங்களும் வுங்க குடும்பமும் அரசியல விட்டு விலகிட்டாலே தமிழ்நாட்டுல வறுமை தானா ஒழிஞ்சிடும்................. விலங்கை சிவா...
சி.ராமசாமி - tup,இந்தியா 2010-08-07 15:57:26 IST
இலவசத்தை கைவிட்டு மனிதனுக்கு உழைப்பை கற்றுகொடுங்கள்,அரசியல்வாதிகள் கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்துங்கள்...தொலைநோக்கு பார்வையோடு திட்டங்கள் தீட்டுங்கள் வறுமை தானாக வெக்கப்பட்டு விலகிவிடும்...i...
மனோஜ்குமார் - Dubai,யூ.எஸ்.ஏ 2010-08-07 15:55:36 IST
தலைவ அதற்கு மக்கள் உழைக்க வேண்டும்!!! நீங்கள் தரும் இளவசத்தல் மக்கள் உளைபதில்லை எப்படி வறுமை இல்லாத நாட்ட வரும்.......
ராம் - சிங்கப்பூர்,இந்தியா 2010-08-07 15:52:01 IST
தாத்தாவின் லட்சிய கனவு நிறைவேற வாழ்த்துக்கள், வறுமையில்லாத தமிழகத்தை உருவாக்குறது இருக்கட்டும் அதுக்கு முன்னாடி இந்த பாழா போன இலவசத்த கொடுத்து மக்களை சோம்பேறியா ஆக்குரத நிறுத்து. எறும்பு புத்த நோண்டிவிட்ட கணக்கா வருசா வருசம் இன்ஜி காலேஜ் கு அனுமதி கொடுத்தா போதுமா அதுக்கு தகுந்த வேலை வாய்ப்பு இல்லாம அனுமதி கொடுத்து என்ன புண்ணியம், தொழில் வாய்ப்பை சென்னை ல மட்டும் கொண்டு வராம தமிழகம் முழுவதும் அனுமதி கொடுத்து வேலையில்லா பிரச்சனைய நீக்குங்க அப்புறம் பாருங்க மக்களின் வாழ்க்கைதரம் எப்படி உயருது னு!!!...
singam - namakkal,இந்தியா 2010-08-07 15:48:03 IST
ஆஹா ...என்னே ஒரு லட்சியம் ...அதென்ன election வருகிறது என்றல் எல்லாரும் பிதற்ற ஆரம்பித்து விடுகிறார்கள் ...............ஏன் ..இத்தனை ஆண்டுகாலம் இந்த லட்சியம் எங்கே போனது ...உம்முடைய குடும்பத்தில் எல்லோருடைய வறுமை இ ஒழித்து விட்டு இப்போது மக்கள் பக்கம் திரும்பி இருகிரீரா ?...
Raja - Singapore,இந்தியா 2010-08-07 15:47:36 IST
இந்த நூற்றாண்டின் மிக சிறந்த ஜோக் . சாத்தான் வேதம் ஓதுகிறது. மக்களே விழித்துக்கொள்ளுங்கள்...
நத்தம் சா.சுரேஷ்பாபு - chennai,இந்தியா 2010-08-07 15:37:34 IST
யார் காதில் பூ சுற்றுகிறார் கருணாநிதி ? ஒரு ரூபா அரிசி உண்மையில் ஏழைக்கு உதவுகிறதா? சத்துணவு உண்மையில் சத்தாக வழங்கப் படுகிறதா?அரசின் திட்டங்கள் யாவும் அவரது சகாக்கள் கொள்ளையடிக்க மட்டும்தான் பயன்படுகிறது இப்படி பேசி பேசி மக்களை மயக்கும் வேலையை முதல்வர் கைவிட வேண்டும்...
கே.சுபாஷ் - uralpattiudumalaippettai,இந்தியா 2010-08-07 15:35:07 IST
இப்படி ஒரு லட்சியம் இருப்பதை நாற்பத்து மூன்று வருடங்களாகக் கேட்டாயிற்று. சத்துணவு, ஒரு ரூபாய்க்கு அரிசி ஐம்பது ரூபாய்க்கு மசாலா இதுவெல்லாம் வறுமை இருப்பதன் அடையாளமா? ஒழிந்து வருவதன் அடையாளமா? இவர்கள் ஒழித்து வருவது யாருடைய வறுமையை என்பது கேலியான விவாதப் பொருளாகி விட்டது. ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் என்பது தெரிந்த ஒன்றுதானே! இது இவர்களின் காலம்!...
சஞ்சீவ் - bangalore,இந்தியா 2010-08-07 15:31:30 IST
அதுக்கு உங்களை மாதிரி அரசியல்வாதிகள் சுரண்டல் ஊழலை விட்டாலே போதுமே, 2011 தமிழகம் வளம் பெற்றிடுமே?...

கருத்துகள் இல்லை: