மேல் மருத்தூர் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் கல்லூர் அலுவலகம் மற்றும் கல்லூரி தாளாளர் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சோதனைகளில் நன்கொடையாக மாணவர்களிடம் வசூலித்த பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதே போல் மேல்மருவத்தூர் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர். மேல் மருவத்தூர் ஆதிபராசத்தி மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கல்லூரியின் தாளாளர் செந்தில் குமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கல்லூரி தாளாளர் செந்தில் குமார், தமது தந்தை பங்காரு அடிகளாருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி தாளாளர் ஸ்ரீதேவி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். பங்காரு அடிகளாரின் மூத்த மகளான ஸ்ரீதேவியும் மருவத்தூரில் வசிக்கிறார்.
comments:
கடவுளின் பெயரால் காசு சேர்க்கும் நபர்களில் இவர் பெரிய ஆள்.இவர் தன்னை அம்பாள் தன்மீது குடி கொண்டு இருப்பதாக மக்களை நம்பவைத்து பணம் சேர்க்கிறார்.இவரது மனைவி மக்கள் எல்லோரும் இவரது கல்லூரிகள் போன்ற வர்த்தக நிறுவனங்களை (ஆமாம் கல்லூரிகள் எல்லாம் வர்த்தக நிறுவனங்களாகி ரொம்ப நாளைச்சி) அனுபவித்து வருகிறார்கள்.வாழ்க வாழ்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக