இனந்தெரியாதோர் வீடு புகுந்து மேற்கொண்ட வாள் வெட்டில் கணவன் மனைவி உட்பட மூவர் படுகாயமடைந்தனர். இச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் பொற்பதி வீதி கொக்குவிலில் இடம்பெற்றுள்ளது. இத் தாக்குதல் சம்பவத்தில் அதேயிடத்தில் வசித்து வரும் மண்கும்பானைச் சேர்ந்த ப.சாந்தலிங்கம் (வயது 60) அவரது மனைவி சா. தங்கநாயகி மற்றும் தியாகராஜா (வயது 44) ஆகிய மூவருமே படுகாயமடைந்தவர்கள் ஆவர். வாகனம் ஒன்றில் வந்த சிலரே இத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். |
திங்கள், 28 ஜூன், 2010
கொக்குவிலில வாள்வெட்டில் மூவர் படுகாயம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக