வியாழன், 1 ஜூலை, 2010

ராவணன்” பட தோல்வியால் ஐஸ்வர்யாராய் அதிர்ச்சியாகி

இந்தி “ராவணன்” பட தோல்வியால் ஐஸ்வர்யாராய் அதிர்ச்சியாகி உள்ளார். தமிழில் “ராவணன்” என்றும் தெலுங்கில் “வில்லன்” என்றும் இப்படம் ரிலீசானது. இவ்விரு மொழிகளிலும் வரவேற்பு உள்ளது. ஆனால் இந்தியில் மட்டும் எதிர்பார்த்தப்படி ஓடவில்லை.
 
“ராவணன்” படம் தனக்கு திருப்புமுனை படமாக அமையும் என்று ஐஸ்வர்யாராய் கூறி உள்ளார். அவர் நம்பிக்கை தகர்ந்து விட்டது.
 
இதுவரை நடித்த படங்களிலேயே ராவணனில் தான் ரொம்ப கஷ்டப்பட்டு நடிப்பை வெளிப்படுத்தினார். காட்டிலும், மலைகளிலும் ஏறி இறங்கி தன்னை வருத்திக்கொண்டார். திரையில் ஐஸ்வர்யாராய் நடிப்பை எல்லோரும் பாராட்டினார். ஆனால் படம் ஜெயிக்கவில்லை. வீட்டுக்குள் முடங்கி வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள்.
 
இந்தி “ராவணன்” தோல்விக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அமிதாப்பச்சன் எடிட்டிங் சரி இல்லை என்றும் கதை குழப்பமாக இருக்கிறது என்றும் தெரிவித்த கருத்தும் தோல்விக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதை தன்னிடம் டெலிபோனில் கூறி இருக்கலாம். இணைய தளத்தில் வெளியிட்டது தவறு என்று மணிரத்னமே சொல்லி வருத்தப்பட்டார். அமிதாப்பச்சன் கருத்தினால் ரசிகர்களிடம் படம் பார்க்கும் ஆர்வம் குறைந்து போனது என்கின்றனர்.
“ராவணன்” கேரக்டரில் அபிஷேக்பச்சனை நடிக்க வைத்தது தவறு என்றும் விமர்சிக்கப்படுகிறது. விக்ரம், ஐஸ்வர்யாராயை கணவன், மனைவியாகவும் ஐஸ்வர்யாவை கடத்திப்போய் காட்டில் வைத்து சித்ரவதை செய்பவராக அபிஷேக்பச்சனையும் நடிக்க வைத்துள்ளனர். நிஜ வாழ்வில் கணவன், மனைவியானவர்களை திரையில் வேறு மாதிரி காட்டியது ரசிகர்களை ஈர்க்காமல் போய் விட்டது. இதுவே தோல்விக்கு காரணம் என்கின்றனர்.

கருத்துகள் இல்லை: