திங்கள், 23 ஆகஸ்ட், 2010

இவர்களைப் பற்றித்தான் இப்போது கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்


தமிழ் சினிமா வில் தமன்னா, ஷ்ரியா போன்றோர் சைஸ் ஜீரோவை அதிகம் நேசிப்பவர்கள்.
இப்படி உடல் அழகை கட்டுக்குள் வைக்க ஹீரோயின்கள் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பூனம் பாஜ்வாவோ அது குறித்து சற்றும் கவலைப்படாமல் இருக்கிறாராம். அவருக்கு இப்போது பட வாய்ப்புகள் இல்லை இதுகுறித்து அவரும்
கவலைப்படவில்லையாம். நான்தான் நடித்தாக வேண்டும் என்று விரும்பினால் என்னை அணுகட்டும். நானாகப் போய் யாரிடமும் வாய்ப்பு கேட்க மாட்டேன், எந்த ஹீரோவின் ரெக்கமன்டேஷனையும் வேண்டி விரும்பி நிற்க மாட்டேன் என்கிறார் படு கூலாக.
இதன் விளைவு வீட்டில் சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்து வருகிறாராம். இதனால் உடல் எடை தாறுமாறாக கூடிப் போய் விட்டதாம். அதுகுறித்தும் அவர் கவலைப்படவில்லையாம். கூடிய எடையைக் குறைக்க எனக்குத் தெரியுமே என்கிறார் இன்னும் கூலாக.

இவர் இப்படி என்றால் பூர்ணாவோ படு வேகமாக மெலியத் தொடங்கியுள்ளாராம். கை நிறையப் படங்களை ஒப்புக் கொண்டிருப்பதால் ஓய்வு ஒழிச்சலின்றி சேவை செய்ய வேண்டியுள்ளதாம். இதனால் சரியான நேரத்திற்கு, சரியான சாப்பாட்டை சாப்பிட முடியாமல் உடல் எடை குறையத் தொடங்கியுள்ளதாம்.
இவர்களைப் பற்றித்தான் இப்போது கோலிவுட்டில் குசுகுசுவென பேசிக்கொள்கிறார்கள்.

தமிழ் நடிகைகளில் என்றும் ஒல்லியாக இருப்பவர் திரிஷா மட்டுமே. ஆனாலும் இவர் உணவு பழக்கவழக்கங்களில்  பெரிதாக கட்டுப்பாடு இல்லாதவர். அதிகம் போவானேன் நடு இரவு ஹோட்டல் பாட்டிகளில் பிரசித்தம் ஆனவர்.

கருத்துகள் இல்லை: