செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

சசிகலாவை கைது செய்ய துடித்த எடப்பாடி பழனிசாமி! சசிகலா அதிரடி


 Uma Pa Se
:  அதிமுகவின் முக்குலத்தோர் வாக்கு வங்கியை கொஞ்சமேனும் அசைத்துப் பார்க்கும் statement.
ஆனால். இதில் சில flipside இருக்கின்றன.
1. பாஜகவால் பேசாமால் silence செய்யப்பட்ட சசிகலா தற்போது திடீரென எடப்பாடி மீது தாக்குதல் நடத்துவது யார் தந்த க்ரீன் சிக்னல்?. 
2. அதிக சீட் வேண்டும் என்று அதிமுகவை Pressurize செய்ய , இதை ஒரு நல்ல வாய்ப்பாக பாஜக கையிலெடுக்க வாய்ப்பு.
3.உயிரோடு தான் இன்னும் இருக்கிறாரா என்று தெரியாத பண்ருட்டி ராமச்சந்திரன், திடீரென விஜய் ஆதரவு நிலைப்பாடு எடுப்பது ஏன்?
4. அதிமுகவுடன் சீட் allocation குறித்து பேசமாட்டோம், பாஜகவுடன் தான் என்று டிடிவி சொல்வதும், 
" அதிமுகவில் இருப்பவர்கள் எல்லாம் துரோகிகள்" என்று விஜய் சொன்ன டோனிலேயே சசிகலா பேசுவதும் 
Bigger ploy by centre to decimate ADMK?
5.இந்த எலெக்‌ஷனில் அதிமுக தோற்க எடப்பாடி தான் முழுமுதல் காரணம் என்று எடப்பாடி மீது குற்றம் சாட்ட காத்திருக்கும் சசிகலா, டிடிவி. அவர்களுடன் கூட்டு சேர்ந்து அதிமுகவை மீட்கப்போகிறோம் என்று சொல்லத் தான் கட்சி ஆரம்பிக்காமலோ, திமுகவில் சேராமலோ இருக்கிறாரா OPS?
6. அதிமுகவோடு விஜய் கூட்டு சேர்ந்தால், தவெகவுக்கு plus. அது நடந்துவிட்டால், கட்சிமீது தனக்கிருக்கும் grip போய்விடக்கூடாது என்பதகாகத் தான் முன்பு எடப்பாடியை வேண்டுமென்றே ஒருமையில் பேசிய ஆதவ் அர்ஜுனா, இன்று மீண்டும் " ஒரிஜினல் அதிமுக இங்கே தான் இருக்கிறது. அங்கே இருப்பது பத்து பேர் தான்" (விசிகவை சீண்டிய அதே tone) என்று சீண்டியிருக்கிறாரா?
What are your thoughts ?

கருத்துகள் இல்லை: