சனி, 11 அக்டோபர், 2025

தவே காவுக்கு 40+ இடங்கள் + துணை முதல்வர் பதவி! எடைப்பாடி பழனிசாமி நடிகர் விஜய் கூட்டணி

 tamil.oneindia.com - Shyamsundar :  சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு 40+ இடங்கள் மற்றும் துணை முதல்வர் பதவி கொடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக விஜயிடம் எடப்பாடி பழனிச்சாமி ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயுடன் டெல்லி பாஜக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
TVK Vijay
கடந்த 48 மணி நேரமாக பாஜகவின் டாப் தலைகள் சிலர் விஜயுடன் நெருக்கமாக பேசி வருவதாக தகவல்கள் வருகின்றன. பாஜக கூட்டணியில் இருக்கும் நடிகர் ஒருவரும் விரைவில் விஜயுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
எத்தனை இடங்கள்?



மொத்தமாக விஜய்க்கு 40+ இடங்களை கொடுக்க பாஜக முடிவெடுத்து உள்ளதாம். தமிழக வெற்றிக் கழகம் - பாஜக - அதிமுக இடையே இந்த கூட்டணி அமைக்கப்படும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம். ஏற்கனவே பாஜக கூட்டணியில் அதிமுக உள்ளது. அதிமுகவிற்கு முதல்வர் பதவி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அமித் ஷா அடித்து சொல்லிவிட்டார். அதேபோல் நயினார் நாகேந்திரனும் அடித்து சொல்லிவிட்டார். பாஜக கூட்டணியில் இருந்த ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் வெளியேறிவிட்டார்கள். இதனால் கூட்டணி வலிமையின்றி இருக்கிறது. கூட்டணியை வலிமைப்படுத்தி தமிழக வெற்றிக்கழகம் வந்தால் மட்டுமே சரியாக இருக்கும்.

அதனால் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயுடன் டெல்லி பாஜக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நீங்கள் கூட்டணிக்கு வாருங்கள்.. வழக்குகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று விஜயிடம் டெல்லி தரப்பு கூறி உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக அடுத்து என்ன முடிவுகளை எடுக்கலாம் என்று விஜய் ஆலோசனைகளை செய்து வருகிறாராம்.
எடப்பாடி வைக்கும் கோரிக்கை

இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு 40+ இடங்கள் மற்றும் துணை முதல்வர் பதவி கொடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 100 இடங்கள் எல்லாம் வழங்கப்படாது. இதற்காக விஜயிடம் எடப்பாடி பழனிச்சாமி ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலில் பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்ற, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த போன் காலில் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிமுக வட்டாரம் நம்மிடம் பேசுகையில்.. கூட்டணிக்கு வருகிறீர்களா? என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார். இதற்கு விஜய் நோ சொல்லவில்லை. நான் மக்களை சந்திக்க போகிறேன். மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க போகிறேன், என்று கூறியதாக தெரிவித்தனர்.

மேலும், பிரச்சாரத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திப்பதாகவும், ஜனவரி மாதத்திற்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவெடுப்பதாகவும் விஜய் உறுதியளித்துள்ளார் என்று அதிமுக வட்டாரம் தெரிவித்தது . இந்த அழைப்பு அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக அதிமுக வட்டாரம் தெரிவித்தது.

இந்த அழைப்பில், எடப்பாடி பழனிசாமி கரூர் சம்பவத்திற்கு தனிப்பட்ட வகையில் விஜயிடம் தனது இரங்கலைத் தெரிவித்ததுடன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு முழு ஆதரவையும் வழங்கினார் என்று கூறப்படுகிறது.

மேற்குப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு மூத்த அதிமுக தலைவர் இது பற்றி நம்மிடம் கூறுகையில், விஜய் எடப்பாடி பேசியது உண்மைதான். கூட்டணிக்கு வாருங்கள் என்று எடப்பாடி கூறினார். உங்களுக்கு முழு சப்போர்ட் கொடுக்கிறேன் என்று எடப்பாடி கூறினார். இதற்கு விஜய் பாசிட்டிவ்வாக பேசி உள்ளார். 2026 பொங்கலுக்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவெடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார் என்று அந்த மூத்த அதிமுக தலைவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: