![]() |
நடிகர் விஜய் தனது புதிய படமான ஜனநாயகன் படத்திற்கான ஒரு காட்சியாகத்தான் கரூர் கூட்டத்தை ஏற்பாடு செய்தார்! இது பெரிய அதிர்ச்சி அளிக்கும் விடயம்!
தனது படப்பிடிப்புக்காக மக்களை ஆபத்தில் சிக்கவைத்து 41 பேரின் உயிருக்கு உலை வைத்துவிட்டார்.
எல்லா விடயமும் அம்பலமாகி விட்டது.
கீழே உள்ள விபரங்களை கவனமாக படியுங்கள்
Vasu Sumathi : ·
தமிழ்நாடு அரசின் SIT விசாரணையில் கரூரில் பயன்படுத்தப்பட்ட 63 ட்ரோன்கள், ArriAlexa 35 போன்ற சினிமா படப்பிடிப்பு கேமராக்கள், ஜனநாயகன் படத்தில் கதாநாயகனுக்கு கூடும் பெருங்கூட்ட காட்சிகளுக்காக விஜய்யின் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தியது தெரிந்துவிடும். (விபத்து நடக்காமலிருந்தால் இதை அந்த படத்தில் சேர்த்திருப்பார்கள்)
மேலும் கரூரில் நடந்தது ஒரு விபத்துதான். இதில் எந்த சதியும் இல்லை என்று நிரூபணம் ஆகிவிட்டால், தன் குற்றத்தை மூடி மறைக்க தவெக செய்த பொய் பிரச்சாரம் தவிடு பொடியாகிவிடும். அதனால்தான் விஜய் SIT க்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறுகிறார்.
மேலும் SIT விசாரணை மூன்று மாதங்களுக்குள் முடிந்து விடும். தவறு செய்தவர்கள் யார் யார் என்பது ஊர்ஜிதமாகிவிடும். ஆனால் பாஜக உதவியுடன் உச்சநீதிமன்றத்தில் SIT க்கு தடை வாங்கி, CBI விசாரணை வாங்கிவிட்டால்... தேர்தல் முடியும் வரை அந்த விசாரணை முடியாது, தனக்கும் எந்த களங்கமும் இருக்காது என்று நினைக்கிறார்.
பாஜக என்ன நினைக்கிறது? இப்போது எடப்பாடி பழனிசாமியும் விஜய்யும் கூட்டணி வைக்கலாமா என்று நடத்தும் ரகசிய பேச்சு கசிந்து விட்டதால், எங்கே கூட்டணி வைத்து நம்மை கழட்டிவிடுவார்களோ என்ற பயம் பாஜகவிற்கு வந்துவிட்டது.
எடப்பாடியை மிரட்ட ஏகப்பட்ட வழக்குகள் இருக்கு. ஆனால் விஜய்யை மிரட்ட தற்போது எந்த ஆயுதமும் பாஜகவிடம் இல்லை. கரூர் ஒரு நல்ல சந்தர்ப்பம். இதை நழுவ விடக்கூடாது என்று நினைப்பதால்தான் இந்த பதபதைப்பு. - யாருக்கும் வெட்கமில்லை!
உச்ச நீதிமன்றத்தில்.....
கரூர் சம்பவத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 3 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இன்று ஆதவ் அர்ஜுனா ஒரு மனு.
பாஜக வழக்கறிஞரும், மாநில சட்டப் பிரிவின் துணைத் தலைவருமான ஜி.எஸ்.மணி, இந்த சம்பவத்தில் தமிழக காவல்துறையின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றதில் இன்று ஒரு மனு.
ஏற்கெனவே நேற்று கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்ற மறுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் உமா ஆனந்தன் நேற்று ஒரு மனு.
இந்த மூன்று மனுக்களையும் அக்டோபர் 10 வெள்ளியன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
தவெகவிற்கு தமிழ்நாடு நீதிமன்றங்கள் மீதும், காவல்துறை மீதும் ஏன் அவ்வளவு பயம்? சரி அவர்களை விடுங்கள். பாஜக ஏன் இப்படி அறுத்து விட்ட கோழி மாதிரி துடிக்கிறது. இந்த வழக்கை CBI க்கு மாற்றி ஏதாவது உண்மையை வெளியே வராமல் மறைக்க பார்க்கிறார்களா அல்லது தவெகவிற்கு கழுமரத்தை காட்டி மிரட்டி ஆதாயம் தேட முயற்சிக்கிறார்களா?
எது எப்படியோ இவர்களுக்கு நீதியை நிலைநாட்ட துளியும் அக்கறை இல்லை என்பது மட்டும் தெரிகிறது
Vasu Sumathi : ·
எல்லார்கிட்டேயும் வீடியோ கால் போட்டு பேசியாச்சு...பஞ்சாயத்து முடிஞ்ச்...
பணத்தையும் இந்த வாரத்துக்குள்ள பட்டுவாடா செய்துட்டா, எல்லாம் முடிஞ்ச்..
உயிரிழந்தவங்க குடும்பத்துல ஒருத்தருக்கு கூட விஜய் மேல எந்த கோபமும் இல்லையாம். இதை கேட்கும் போது, இவர்களுக்கு போய் வக்காலத்து வாங்கிக்கொண்டிருந்தோம் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.
கரூரில் உயிரிழந்த 2 வயது குழந்தை துரு விஷ்ணுவின் அத்தை, விஜயிடம் "ஏன் உடனடியாக வந்து பார்க்கவில்லை" என்று கேட்டதற்கு, "நான் சொல்லியும் ஏன் குழந்தையை அழைத்து வந்தீர்கள்" என்று சிறிதும் குற்ற உணர்ச்சி இன்றி கேட்டு இருக்கிறான்.
அவன் திருந்தவில்லை, திருந்த மாட்டான்.
ரசிகர்கள் திருந்துவில்லை, திருந்த மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக