![]() |
![]() |
| Srimavo with Alfred duraiyappa |
ராதா மனோகர் : ஸ்ரீ மாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்க 17 April 1916 – 10 October 2000!
உலகின் முதல் பெண் பிரதமர் என்று மட்டும் கூறிவிட்டு சுலபமாக கடந்து போய்விட முடியாத அளவு அம்மையாரின் சாதனைகள் மிக பெரிது!
பொது வெளியில் ..குறிப்பாக தமிழ் பொதுவெளியில் ஸ்ரீமா அம்மையாரின் சாதனைகள் போதிய அளவு கூறப்படவில்லை!
அதற்கு உரிய காரணமும் எல்லோரும் அறிந்ததுதான்!
தமிழ் தேசிய போர்வையில் வெறுப்பு அரசியல் செய்து கொண்டிருந்த எஸ்ஜேவி செல்வநாயகத்தின் தரகு அரசியல் வியாபாரத்திற்கு 1970 இல் முடிவு கட்டியவர் ஸ்ரீ மாவோ அம்மையார்தான்!
அதன் பின்புதான் தமிழர்களை செல்வநாயகம் ஆயுத கும்பல்களிடம் தாரை வார்த்தார்!
தமிழர்களை தீராத படுகுழியில் தள்ளிவிட்டார்!
உண்மையில் ஸ்ரீமாவோ அம்மையாரும் செலவநாயகமும் நெருங்கிய குடும்ப நண்பர்கள்தான்!
சேனாநாயக்காவின் ஐக்கிய தேசிய கட்சிக்கும் அதன் நட்புறவு கட்சியான தமிழ் காங்கிரசுக்கும் எதிராகத்தான் செல்வா தமிழரசு கட்சியை நிறுவினார்.
ஸ்ரீமாவோ அம்மையாரின் கணவர் எஸ் டபிள்யு ஆர் டி பண்டாரநாயக்காவோடு மனப்பூர்வமான ஒரு நட்புறவு அடிப்படையில்தான் பரஸ்பரம் சிங்கள தமிழ் இனவாத அரசியலை இருவரும் முன்னெடுத்திருந்தனர்.
1960 இல் திரு அல்பிரட் துரையப்பாவின் நாடாளுமனற நுழைவானது தமிழரசு கட்சியின் தரகு அரசியல் வியாபாரத்திற்கு ஒரு சவாலாக மாறியது.
இதன் காரணமாகத்தான் 1965 இல் ஸ்ரீமாவோ டட்லி சேனநாயக்காவுக்கு இடையே ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்ட போது சத்தம் போடாமல் டட்லி சேனநாயக்காவோடு கூட்டணி ஆட்சி அமைத்தார் செல்வநாயகம்!
அதுவும் தனது ஜென்ம எதிரியான திரு ஜி ஜி பொன்னம்பலத்தோடு போட்டி போட்டுகொண்டு டட்லி அரசில் ஐக்கியமானார்.
அந்த அரசில் அமைச்சு பதவி ஏற்க திரு ஜி ஜி பொன்னம்பலம் மறுத்துவிட்டார்
ஆனால் தமிழரசு கட்சி மூன்று அமைச்சு பதவி ஏற்க தயாரானது
பின் சுயாட்சி நவரத்தினத்தின் எதிர்ப்பு காரணமாக திருச்செல்வம் மட்டும் அமைச்சு பதவி ஏற்றார்,
தங்கள் கட்சியின் செல்வாக்கு சரிந்து வருவதை உணர்ந்த தமிழரசு கட்சி 1969 இல் திருகோணமலை "கோணேஸ்வர ஆலய பிரதேசத்தை புனித நகரமாக" பிரகடன படுத்த திரு டட்லி சேனநாயக்க மறுத்துவிட்டார் என்று கூறி அரசில் இருந்து வெளியேறியது!
தென்னிலங்கையில் உள்ள எந்த கட்சியும் தமிழரசு கட்சியின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற சவடால் கோஷத்தையே ஒரு தேர்தல் முழக்கமாக வைத்து 1970 தேர்தலை எதிர்கொண்டது தமிழரசு கட்சி!
மறுபுறத்தில் தென்னிலங்கையில் ஸ்ரீமாவோ அம்மையார் இதையே சிங்கள மக்களிடம் ,
பார்த்தீர்களா நாம் இன்னும் கூட சிங்கள பெரும்பான்மை மக்களின் ஆட்சியை அமைக்க முடியாமல் உள்ளது.
மக்களே நீங்கள் கொடுக்கும் ஆதரவை முழுமையாக தாருங்கள் .
தமிழரசு கட்சியிடம் கையேந்தி ஆட்சி அமைக்கும் அவல நிலைக்கு எம்மை தள்ளிவிட வேண்டாம் என்று உருக்கமாக பிரசாரம் செய்தார்!
மெத்த படித்த செல்வா கோஷ்டியின் முட்டாள் தனத்தையே தனது ராஜதந்திரத்தால் வெற்றி முழக்கமாக மாற்றினார் ஸ்ரீமாவோ அம்மையார்
அதிகம் படிக்காத அடுப்படி பெண் என்று இவர்களால் மேடைக்கு மேடை இகழப்பட்ட ஸ்ரீமாவோ அம்மையார் பரம்பரை பரம்பரையாக படித்த இந்த கனவான்களின் தரகு அரசியல் கனவில் மண் அள்ளிப்போட்டார்!
1970 தேர்தலில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தார் ஸ்ரீமாவோ அம்மையார்!
ஒவ்வொரு தேர்தல் முடிவுகள் வெளியானதும் தரகு அரசியல் பேச்சு வார்த்தைக்கு தென்னிலங்கை கட்சிகள் தன்வீட்டு வாசலில் காத்து நிற்கும் காட்சியை கண்டு ரசித்து கொண்டிருந்த செல்வநாயகத்திற்கும் தமிழரசு கட்சிக்கும் இந்த தேர்தல் முடிவுகள் அசல் அதிர்ச்சி வைத்தியம் பார்த்தது!
ஸ்ரீமாவோ அம்மையாரின் இந்த பெருவெற்றி காரணமாக அதுவரை யாழ்ப்பாண பல்கலை கழகம் உருவாவதில் உள்ள பெரிய தடை நீங்கியது!
அந்த தடை எஸ்ஜேவி செல்வநாயகம்!
1952 இல் தன்னை தோற்கடித்த நடேசபிள்ளையின் இலட்சிய கனவு யாழ் பல்கலை கழகம் .
அந்த நிலமும் கட்டிடமும் நடேசபிள்ளையின் மாமனார் ராமநாதனின் நன்கொடைதான்.
வெறும் ஒரு தேர்தல் தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் நடேசபிள்ளையை எதிரியாக கருதி அவரின் யாழ் பல்கலை கழகத்தையே தடுத்தார் செல்வநாயகம்.
அதற்கு உரிய அனுமதியை பெற்றது செல்வநாயகத்தின் இன்னொரு எதிரியான ஆல்பிரட் துரையப்பா!
இந்த இரண்டு காரணங்கள்தான் யாழ்ப்பாண பல்கலை கழகம் உருவாக கூடாது என்று செல்வா அடம்பிடித்த காரணம்.
தமிழ் தேசியத்தின் பிதாமகர்கள் எவ்வளவு மோசமான மனிதர்கள்?
ஸ்ரீமாவோ அம்மையாரின் மூன்றில் இரண்டு பங்கு வெற்றிதான் யாழ்ப்பாண பல்கழகம் நிறுவுவதில் உள்ள தடையை நீக்கியது !
அதுவரை செல்வநாயகத்தின் பத்து பன்னிரண்டு எம்பிக்கள் பதவிக்கு வரும் அத்தனை கட்சிகளையும் பிளாக் மெயில் செய்து கொண்டிருந்தது.
1974 இல் பிரதமர் ஸ்ரீமாவோ அம்மையார் யாழ் மேயர் திரு அல்பிரட் துரையாப்பா முன்னிலையில் திறந்து வைத்தார்!
இப்பதிவு ஸ்ரீமாவோ அம்மையாரின் முற்று முழுதான வரலாறு அல்ல!
தமிழர்களின் பொதுவெளியில் ஸ்ரீமாவோ அம்மையாருக்கு எதிராக செய்த பொய்பிரசாரங்களுக்கு அளவு கணக்கில்லை .
அத்தனையும் செல்வநாயகம் கும்பலின் ஆற்றாமையால் விளைந்த அவலம் என்றுதான் கூறவேண்டும்.
தமிழரசு கட்சி அதுவரை நடத்தி வந்த மிதவாத தரகு அரசியலின் முடிவை அடுத்து அதை விட மோசமான ரவுடி அரசியலை முன்னெடுத்தது
ஒரு தவறை மறைக்க அதைவிட மோசமான தவறை கையெலெடுத்தது.
கொஞ்சம் கூட அரசியல் மயப்படுத்ததா ரவுடி கும்பலின் கைகளுக்கு தமிழ் அரசியலை நகர்த்தி முள்ளிவாய்ககாலுக்கு பாதை அமைத்தது!
ஸ்ரீமாவோ அம்மையாரின் ஆட்சியில் தவறே நடக்கவில்லை என்று கூறவில்லை
எல்லா ஆட்சிகளை போலவே அவரது ஆட்சியிலும் பல விமர்சனங்கள் உண்டு.
ஆனால் தமிழர்களின் பார்வையில் அவரை ஒரு வில்லியாக ஒரு படிக்காத பெண்ணாக எல்லாம் மோசமாக மக்களுக்கு காட்டிய தமிழரசு கட்சியின் அரசியலை விட ஸ்ரீமாவோவின் அரசியல் பல மடங்கு உயர்ந்ததுதான்!
இன்று அவரின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்
![]() |



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக