இலங்கையில் உள்ள சிங்கள மக்களின் மரபணு 69.86% +/- 0.61 தென்னிந்திய தமிழர்களிடம் பொருந்தி உள்ளது
இலங்கையில் உள்ள தமிழர்களின் மரபணு 16.63% +/- 8.73 வீதம் தென்னிந்திய தமிழர்களோடு பொருந்தி உள்ளது
ஆச்சரியமான ஒரு விடயம் இலங்கை தமிழர்களை விட சிங்கள மக்களின் மரபணு தமிழ்நாடு தமிழர்களோடு அதிக அளவில் பொருந்தி உள்ளது
மேலும் சிங்கள மக்களின் மரபணு 25.41% +/- 0.51 வீதம் வங்காள மக்களோடு பொருந்தி உள்ளது
இலங்கையில் உள்ள சிங்கள மக்களும் தமிழ் மக்களும் 55%. மரபணு பொருந்தி உள்ளது
The Sinhalese had the greatest contribution from South Indian Tamils (69.86% +/- 0.61),
Sri Lankan Tamils to have a greater contribution from the Sinhalese of Sri Lanka (55.20% +/- 9.47) raara
ராதா மனோகர் சிங்கள மொழியிலும் இலங்கை தமிழிலும் சமஸ்கிருதம் அளவுக்கு அதிகமாகவே கலந்திருப்பது பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்
இலங்கையில் தமிழர்களை போலவே சிங்கள மக்களிடையேயும் பார்ப்பன மயக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருப்பது பற்றியும் ஆய்வு செய்தல் வேண்டும்!.
குறிப்பாக சென்ற நூற்றாண்டில் இலங்கை சிங்கள தமிழ் தலைவர்கள் தமிழக இந்திய பார்பனர்களோடு நெருங்கிய உறவை கொண்டிருந்தார்கள்
லண்டனிலும் சென்னையிலும் இவர்கள் கல்வி சார்ந்தும் தொழில்துறை சார்ந்தும் நல்ல தொடர்புகளை வைத்திருந்தனர்
அந்த காலக்கட்டங்களில் பார்ப்பனர்கள்தான் எல்லா உயர்ந்த இடங்களிலும் நிலை கொண்டிருந்தனர்
அதன் காரணமாகவே இலங்கை சிங்கள தமிழ் தலைவர்களுக்கு பார்ப்பனர்கள் மேல் ஒரு அளவு கடந்த மரியாதையை அல்லது மயக்கம் இருந்தது
இந்த ஆரிய மயக்கமானது சிங்கள மொழியிலும் இலங்கை தமிழ் மொழியிலும் ஏராளமான சம்ஸ்கிருத சொற்கள் கலப்பதற்கு காரணமாகியது
அன்றாட வாழ்க்கையிலும் பார்ப்பனர்களை பார்த்து காப்பி அடிக்கும் பழக்கமும் உண்டானது
பார்ப்பனரின் சகவாசத்தால் இலங்கை தமிழர்கள் திராவிடம் என்ற சொல்லே தீண்டக்கூடாத சொல்லாக அடிமனதில் பதியவைத்து கொண்டனர்
அசல் திராவிட மக்களாகிய சிங்கள மக்களையும் தங்களை ஆரிய மக்கள் என்று நம்ப வைத்தார்கள்.
எந்த காலத்திலும் திராவிட மக்கள் ஒன்று சேர்ந்துவிட கூடாதல்லவா?
சிங்கள மக்களை ஆரியர் என்று நம்ப வைத்தனர்
மறுபுறத்தில் தமிழர்களை திராவிடத்திற்கு எதிரியாக்கினார்கள்
மொத்தத்தில் இலங்கையின் மொத்த மக்களும் ஆரிய பார்ப்பனர்களின் நூலில் கட்டி விடப்பட்டு தெருவில் ஆடவிட்டு வித்தை காண்பிக்கும் குரங்கின் நிலைக்கு உள்ளாகினர்
சிங்கள மக்கள் அசல் திராவிட மக்கள்தான்
இலங்கை தமிழர்கள் அசல் திராவிட மக்கள்தான்
இருபகுதியினரும் மலையாள தெலுங்கு கன்னட துளு ஒடிஷா வங்காள தமிழ் மக்களின் கலவைதான்
இலங்கை பௌத்தம் என்பது ஆரிய பார்ப்பன சமாசாரங்களை காப்பி அடிப்பதையே ஒரு பெருமையாக கருதுகின்றது .
மீள்பதிவு : சிங்கள மொழியின் ஆதி அடையாளமாக கடம்ப கிரந்த எழுத்துக்களில் சில குறிப்புக்கள் இருப்பதாக (கி மு) இரண்டாம் நூற்றாண்டில்) சிலர் கூறுகிறார்கள்
ஆனால் மேலும் சிலர் அந்த எழுத்துக்களை தமிழ் / சிங்கள / தமிழி (பிராமி) எழுத்துக்கள் என்பதாகவும் கூறுகிறார்கள்.
கடம்ப அரசர்களின் காலம் கிமு) மூன்றாம் நூற்றாண்டுகளில் இருந்து கிமு) இரண்டாம் நூற்றாண்டுகள் வரையினாலாவை.
Sinhala Prakrit (until 3rd century CE)
Proto-Sinhala (3rd–7th century CE)
Medieval Sinhala (7th–12th century CE)
Modern Sinhala (12th century – present)
இப்படி பல ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சி என்று குறிப்பிட்டாலும் 12 ஆம் நூற்றாண்டில் இருந்த நிசங்கமல்லா அரசரின் காலத்தில்தான் சிங்கள மொழியில் ஒரு இலக்கியம் உருவானதாக கூறப்படுகிறது
எனவே நிசங்கமல்லா ஆட்சிக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து இன்றைய சிங்கள மொழியின் உருவாக்கம் நடந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு
ஏராளமான சிங்கள சொற்களை சமஸ்கிருத மூலத்தில் முடிச்சு போடும் காரியமே பெரிதும் நடந்திருக்கிறது
பல தமிழ் சொற்களை சம்ஸ்கிருத சொற்களில் இருந்து உருவானவை என்று இப்போதும் கூட எக்கச்சக்கமான வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்
சமஸ்கிருதம் என்பது எல்லா உபகண்ட மொழிகளுக்கும் தாய் மொழி என்ற அண்டப்புளுகு ஆகாச புழுகுணிகளின் பிரசாரங்கள் மீண்டும் மீண்டும் அவிழ்த்து விடப்பட்டதால் அந்த கருத்தே பலரின் மனதில் இன்றும் கூட நிலை பெற்றிருக்கிறது
உதாரணமாக ஜலம் என்ற சம்ஸ்கிருத சொல் நீரை குறிக்கிறது
இந்த ஜலம் என்ற சம்ஸ்கிருத சொல்லின் ஆதாரம் சலம் என்ற தமிழ் சொல்லேயாகும்
குடிநீருக்கு நதிகளையே பெரிதும் சார்ந்திருந்த மக்கள் சலசலத்து ஓடுவதால் அதை சலம் என்றழைத்தார்கள்
இது போல ஏராளமான தமிழ் சொற்கள் உலகின் பல மொழிகளையும் மருவி உருமாறி உச்சரிக்க படுகிறது
நீர் என்பதை சிங்கள மொழியில் வத்துரு என்று கூறுகிறார்கள்!
இது ஒரு (வத்துரு) அசல் தமிழ் சொல்லாகும்
( ஆனால் இதையும் சம்ஸ்கிருத சொல்லில் இருந்து வந்ததாக இந்த ஆரிய மயக்கவாத ஆய்வாளர்கள் கதை அளந்திருக்கிறார்கள்)
ஒரு மொழியின் ஆதார சொற்களில் நீர் என்ற சொல்லுக்கு மிகவும் முக்கியத்துவம் இருக்கிறது
வத்துரு என்ற சொல் வற்றாத ஊற்று என்ற சொல்லின் மருவலே ஆகும் என்றெண்ணுகிறேன்.
வைணவ சைவ கழுவேற்றிகளின் இனசுத்திகரிப்பில் இருந்து தமிழ் பௌத்தர்கள் தங்களை காத்து கொள்ள இலங்கைக்கும் தப்பி ஓடினார்கள் என்பது வரலாறு.
புதிய இடத்திற்கு குடிபெயர்ந்து காடுகளிலும் மலைகளிலும் தங்கள் உறைவிடங்களை அமைத்து கொண்ட திராவிட பௌத்தர்கள் நீர் ஊற்றுக்கள் இடத்தைதான் முதலில் தேர்வு செய்திருப்பார்கள்
எங்கே வற்றாத ஊற்று உள்ளது என்று தேடி குடி பெயர்ந்திருப்பார்கள்
நீரை குறிப்பிடுவதற்கு வற்றாத ஊற்று என்பது ஒரு காரண பெயராக உருவாக்கி இருப்பதற்கு எல்லா வாய்ப்பும் உள்ளது.
சிங்கள மொழியானது பௌத்தத்தை காப்பதற்கு உருவான மொழி என்ற எனது கருத்துக்கு வலு சேர்ப்பதாக ஏராளமான சிங்கள சொற்கள் உள்ளன
வத்துரு என்ற சொல் வற்றாத ஊற்று என்ற சொல்லின் சங்கேத சொல்லாகவும் இருக்க வாய்ப்புள்ளது
சிங்கள மொழியானது பௌத்த அறிவு கருவூலங்களை பார்பனீயத்திடம் இருந்து காப்பதற்காக உருவாக்கப்பட்ட மொழி என்ற கருத்திற்கு இவை ஏற்புடையதாக இருக்கிறது
சுமார்4000 சொற்கள் தமிழுக்கும் சிங்களத்திற்கு பொதுவான சொற்கள் என்று டாக்டர் ராஜசிங்கம் நரேந்திரன் என்பவர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார்
அதன் இணைப்பை இங்கு கொடுத்திருக்கிறேன்
கொழும்பு டெலிகிராப் .காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக