ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

யாழ்ப்பாணம் ரீச்சாவில் என்ன நடக்கிறது? ஒரு தந்தையின் வேதனை

 Gabriel Jo Jovan :  இப்பதிவை மீள்பதிவாக்குவதன் முக்கிய காரணம் :
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு கண்டனப்பதிவை முகநூலில் இட்டு இருந்தார்.. கூடவே வக்காலத்துக்கு நிராஜ் டேவிட் என்பவரும் திசை தெரியாமல் நன்றாக ஊதியும் இருந்தார்.
விடயத்துக்கு வருவோம்..
ஒருவருடைய சொந்த உழைப்பை புலம்பெயர் தேசங்களில் இருந்து பல கோடிகளை கொண்டு வந்ததாக பீத்துவோரின் பின்னணிகளை பார்த்தால் இவைகள் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்துவிடும் என ஏற்கனவே கணக்கிட்டு மிகுதிப்பணங்களை சுருட்டியவர்கள் தான் இவர்கள் என்பது கண்கூடு.. 
காரணம் ஒருவர் ஐரொப்பாவில் 2-3 வேலைகள் செய்து இருந்தாலும் இப்படி பெருந்தொகையை சேமிக்க முடியாது என்பதை நன்கு நினைவில் கொள்ளுங்கள். 


இக்கூற்றை மறுப்பவர்கள் தங்களுடைய வருமான கணக்குகளை பொது இடத்தில் ஆதாரத்துடன் உறுதிப்படுத்துங்கள்.
அல்லது எதாவது லாட்டரி சீட்டில் பணம் கிடைத்ததா எனவும் ஆதாரமாக்குங்கள்.
Facto : லைக்கா பாஸ்கரனின் அடிப்படை மூலதனம் தமிழர்களின் அதிக நேர தொலைபேசி உரையாடல் குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் இருந்து இலங்கைக்கு.. அதனால் தொலைத்தொடர்பு பரிவர்த்தனை வியாபாரம்
றீச்சா பாஸ்கரனின் மூலதனம்.. 
போர் முடிந்து விட்டது.. சொகுசுக்கு அடிமையான புலம்பெயர் தமிழர்கள் இலங்கை நோக்கி வருவார்கள்.. ஏனைய உல்லாசப்பிரயாணிகளை போல தெற்குக்கு போகாமல் வடக்குக்கே வருவார்கள் என்பதுதான்..
ஆக மொத்தத்தில் பணம் சம்பாதிப்பதே இதன் நோக்கம் !
இறுதியாக..: றீச்சா பாஸ்கரன் ஐரொப்பாவில் Pub club/ களியாட்ட விடுதிகளுக்கு போய் உள்ளே பியர் வாங்கினாரா அல்லது பக்கற்றுக்குள் குப்பி கொண்டு போய் அடிச்சாரா ? அப்படி செய்து இருந்தால் அது pub நடத்துறவனுக்கு வியாபார நட்டம் தானே ? 
என்ன பாஸ்கரன் நான் சொல்வது சரியா பிழையா ?
வீடியொ பதிவு செய்த தம்பிக்கு ஒரு வேண்டுகோள் : உம்மிடம் பணம் இல்லை என்றால் இப்படியான இடங்களுக்கு போகவேண்டாம்..

கருத்துகள் இல்லை: