வியாழன், 18 செப்டம்பர், 2025

பாஜக அணி’க்கு 40 சீட்- அமித்ஷாவிடம் இபிஎஸ் உறுதி! திமுக ‘தலைகளுக்கு’ம் குறி வைத்த ரிப்போர்ட்!

 மின்னம்பலம் : பொறுமய்யா.. முதலில் இருந்து வருகிறேன்.. சென்னையில் இருந்து நேற்று காலை 9.30 மணிக்கு டெல்லி ஏர்போர்ட் ரீச் ஆனார் எடப்பாடி. திண்டுக்கல் சீனிவாசன், கேபி முனுசாமி, எஸ்பி வேலுமணியும் டெல்லியில் லேண்ட் ஆனார்கள்.
டெல்லி ஏர்போர்ட்டில் தம்பிதுரை, சிவி சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோர்தான் எடப்பாடி டீமை வரவேற்றாங்க..
அதுக்கு பிறகு இந்த முறையும் கார்களை மாற்றிப் போனாரா?
முந்திரிக்கொட்டை மாதிரி பேசப்படாது.. இந்த முறை அரசு வாகனத்தில்தான் டெல்லி வீதிகளில் வலம் வந்தார் இபிஎஸ்.. DL1C AH5420 என்ற, தமிழக அரசின் எதிர்க்கட்சித் தலைவருக்கான வாகனம்தான் எடப்பாடி பயன்படுத்தியது.



ஆனால் இந்த முறை, தமிழ்நாடு இல்லத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சூட் ரூம் ஏற்பாடு செய்யப்பட்டும் அதில் அவர் தங்கவில்லை.

அப்ப எங்கே தங்கினாராம்?

அமித்ஷா வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற தாஜ் மான்சிங் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில்தான் எடப்பாடி தங்கினார்.

ஓஹோ..

அங்கிருந்து அதிமுக சீனியர்களுடன் சேர்ந்து துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு போய் வாழ்த்து தெரிவித்தனர்.

டெல்லி சர்ச் சாலையில் இருக்கிற துணை ஜனாதிபதி சிபிஆர் வீட்டுக்கு அதிமுகவின் 4 எம்.பிக்கள், 3 மாஜி அமைச்சர்களுடன் போன எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பாம். இப்படி ஒட்டுமொத்தமாக எல்லோரும் சேர்ந்து 25 நிமிடம் பேசியிருக்காங்க..

பின்னர், எடப்பாடியும் சிபிஆரும் மட்டுமே தனியாக அமர்ந்து சீரியசாக பேசினாங்க.. இருவரும் 45 நிமிடம் பேசியிருக்காங்க..

டெல்லிக்கு வந்தது எதற்காக? பாஜக மேலிடத்திடம் என்ன எதிர்பார்ப்பு? அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக மேலிடம் இப்படி எல்லாம் நடந்துகிட்டா நல்லா இருக்கும்.. என பல விஷயங்களை தாம் சிபிஆரிடம் சொன்னதாக எடப்பாடி, தமது சகாக்களிடம் பகிர்ந்து கொண்டாராம்

இந்த சந்திப்புகள் அனைத்தும் சூப்பரான மதிய உணவுடன் முடிந்தது. சிபிஆர் வீட்டில் தயாரான மதிய உணவில் கொங்கு உணவுகள் அதிகம் இருந்தன. நார்த் இண்டியன் உணவு வகைகளும் வெரைட்டியாக வைக்கப்பட்டிருந்ததாம்.

சிபிஆர் வீட்டில் சுமார் ஒன்றரை மணிநேரம் இருந்த எடப்பாடி தமது சகாக்களுடன் ரொம்பவே மகிழ்ச்சியுடன் கிளம்பினார்.
40 seats for BJP EPS assured to Amit Shah

எடப்பாடி தமது வீட்டில் இருந்து கிளம்பிய பின்னர், அமித்ஷாவுக்கு ‘சேர வேண்டிய’ தகவல்களை பாஸ் செய்தாராம் சிபிஆர்.

சிபிஆர் வீட்டில் இருந்து எடப்பாடி கிளம்பிய சில மணிநேரத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா அங்கே போனது ரொம்பவே கவனிக்கப்பட்டுச்சு.

பின்னர், இரவு 8.10 மணிக்கு அமித்ஷா வீட்டுக்குள் எடப்பாடி பழனிசாமியும் அவரது சகாக்களும் உள்ளே நுழைந்தனர். தொடக்கத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் சிறிது நேரம் பேசிய அமித்ஷா, பின்னர் எடப்பாடி பழனிசாமியுடன் சுமார் 40 நிமிடங்கள் தனியே பேசியதாக சொல்லப்படுகிறது.

அப்படி என்ன 40 நிமிடம் தனியாக பேசுனாங்களாம்?

நாம ஏற்கனவே சொன்னபடி, “டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா இவங்களை எல்லாம் அதிமுகவில் இருந்து நீக்க சொன்னதே கட்சி நிர்வாகிகள்தான். நானா எடுத்த முடிவு இல்லை.. அவங்களை எல்லாம் மீண்டும் கட்சியில் சேர்த்தால் எங்க கட்சி நிர்வாகிகள், தொண்டர்களே கடும் அதிருப்தி அடைஞ்சுடுவாங்க.. அடுத்ததாக இவங்க ஒவ்வொருத்தரும் அத்தனை தொகுதி, இத்தனை தொகுதி வேணும்னு கேட்பாங்க.. இப்படி அடம்பிடிச்சாங்கன்னா பாஜகவுக்கே நெருக்கடியாக வரும்.. அப்படியே அவங்களை கட்சியில் சேர்த்து தேர்தலில் நிற்க வைச்சாலும் அதிமுக- பாஜக கூட்டணியை ஜெயிக்க விடமாட்டாங்க.. ஏன்னா, என்னை பலவீனப்படுத்த, அதிமுக- பாஜக கூட்டணி வேட்பாளர்களை தோற்கடிக்கிற வேலையைத்தான் அவங்க செய்வாங்க.. அதனால அவங்களை அதிமுகவில் சேர்க்கனும்னு வலியுறுத்தாதீங்க.. அதே நேரத்துல பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு 40 சீட் கொடுக்கிறோம்.. அதுல அவங்களுக்கு (டிடிவி தினகரன், ஓபிஎஸ்) நீங்க பார்த்து கொடுத்துக்குங்க” என்றாராம்.
40 seats for BJP EPS assured to Amit Shah

அத்துடன், “இன்னமும் முதல்வர் வேட்பாளர்னு அறிவிக்காமல் இருக்கிறோம்.. அதே மாதிரி கூட்டணி ஆட்சி இல்லைன்னு சொன்னாதான் தமிழ்நாட்டில் நல்லா இருக்கனும்” எனவும் எடப்பாடி சொன்னாராம்.

கடைசியாக அமித்ஷாவிடம், திமுக அமைச்சர்கள் தொடர்பான ஒரு ரிப்போர்ட் கொடுத்து, “தேர்தலுக்கு முன்னாடி திமுகவை டேமேஜ் செய்யனும்னா ஐடி, ஈடி ரெய்டு நடத்தனும்.. இதுல அமைச்சர்களைப் பற்றிய டீட்டெய்ல்ஸ் இருக்கு” என அழுத்தமாக சொன்னாராம் எடப்பாடி.

அதை வாங்கி புரட்டிக் கொண்டே, ‘நீங்க கவலைப்படாதீங்க.. நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்’ என சொன்னாராம்..

‘இபிஎஸ்-ன் டெல்லி விசிட் எஃபெக்ட்டா? இல்லையா? என்பது அடுத்த சில நாட்களில் வெடிக்கப் போகும் விவகாரங்களில்தான் தெரியுமாம்’ என டைப் செய்தபடியே ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: